தமிழ் இலக்கணம்
லகர,ளகர,ழகர உச்சரிப்பு முறைகள்
ல,ள,ழ,ர,ற,ன,ண,ந, எழுத்தில் வரும் வித்தியாசங்கள்
எழுத்துப் பிழையால் ஒரு சொல்லின் அர்த்தம் தலைகீழாக மாறிவிடும். தமிழ் மொழியில் சில எழுத்துக்கள் ஒரு எழுத்துக்களை போல தோன்றினாலும் நாம் உச்சரிக்கும் வகையில் வேறு படுத்த வேண்டும் இந்த வேறுபாடு தெரியாத காரணத்தினால் சிலர் தன்னை "தமிழர்" என்று சொல்லிக் கொள்வதற்கு பதிலாக "தமிலர்" எனக் குறிப்பிடுவதும் உண்டு எனவே ல,ள,ழ,ர,ற,ன,ண,ந இந்த எழுத்துகளை எவ்வாறு உச்சரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.
ல
ள
நீளம் பள்ளம் கொல்லம் குள்ளம் உள்ளம்
என்னும் சொற்களை உச்சரித்து பாருங்கள் இதில் வரும் "ள" எழுத்து மேல் வாயை நாவின் ஓரம் தடித்து தடவுவதால் பிறக்கின்றது.
ழ
பழம், உழவு, கிழவர், கிழவி
இந்த சொற்களை உச்சரித்துப் பாருங்கள் இதில் வரும் "ழ" என்ற எழுத்து மேல் வாயை நாம் இன் தடவுவதால் தோன்றுகிறது." அண்ணம் நுனிநா வருட ரழ வரும்". என்பது நன்னூல் சூத்திரம். மேல் வாயை நாவின் நுனி தடவ ரகரமும் ழகரமும் பிறக்கும் என்பது இச் சூத்திரத்தின் பொருள்.ர், ழ் என்னும் இரண்டு எழுத்துக்களும் ஒரே விதமாக பிறக்கும் என்று அறிக.
ர,ற
ஈரம், கரம், மரம், வாரம், நரம்பு, வீரம்:
இவற்றில் வரும்"ர" எனும் எழுத்து மேல் வாயை நாவின் நுனி தடவுவதால் தோன்றுகிறது.
படமும் நன்னூல் சூத்திரமும் முன்பு காட்டப் பெற்றன.
உறவு, பிறகு, சிறப்பு , இறப்பு, பிறப்பு,
இவற்றில் வரும்" ற" எனும் எழுத்து மேல் வாயை நாவின் நுனி மிக பொருந்துதலால் பிறக்கின்றது.
" அண்ணம் நுனிநா நனியுறில் றனவரும்"
என்பது நன்னூல் சூத்திரம். மேல் வாயை நாக்கின் நுனியில் மிக பொருந்தினால் "றகரமும், னகரமும் பிறக்கும் என்பது இச் சூத்திரத்தின் பொருள். ற், ன் என்னும் இரண்டு எழுத்துக்களும் ஒரேவிதமாக பிறக்கும் என அறிக.
ன,ண,ந
கனம்,கன்னம்,கனவு, மனம்
இவற்றை உச்சரித்துப் பாருங்கள் அவற்றில் வரும் "ன" என்னும் எழுத்து மேல் வாயை நாவின் நுனியைப் தொட்டுப் பொருந்துவதால் பிறக்கின்றது.
அண்ணா கணம், நாணம், நாணல்:
இவற்றில் வரும் "ண" எழுத்து நாவின் நுனி மேல் வாயில் நுனியுடன் பொருந்துதலால் தோன்றுகின்றது.
ந
நகம், நகரம்,, நரகம், நகை, நண்டு நரி
இவற்றில் வரும்"ந" என்ற எழுத்து மேல்வாய்ப் பல்லின் அடியை நாவின் நுனி பொருந்தும் போது பிறக்கிறது.
மேற்காணும் முறைகளே இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் விதங்கள் என நாம் பார்த்தோம்.
வேறுபாடு தெரியாமல் தவறுதலாக அல்லது தவறி உச்சரிப்பதால் சொற்களின் பொருள்களில் உண்டாகும் வேறுபாடுகளை காண்போம்
அளகு - பெண் மயில் அழகு - வனப்பு அலி - ஆண் பெண் தன்மைகள் அற்றவர்கள் அளி - கொடு, அருள் அழி - இல்லாமல் செய் அலை - கடலின் அலை அளை - சோறு, தயிர் அழை - கூப்பிடு ஆல் - ஆலமரம் ஆள் - ஆளுதல், ஆண்மகன் ஆழ் - முழுகு ஆலி - மழைத்துளி ஆளி - விலங்கு ஆழி -- கடல் இலகு - விளங்கு இளகு - நெகிழ் இலை - தாவர உறுப்பு இளை - மெலி, காவற்காடு இழை - ஆபரணம்,நூற்கும் நூல் உலர - காய உளர -- தடவ உலவு - சுற்று, நடந்து செல் உளவு - ரகசியம், வேவு உழவு - பயிரிடும் தொழில் உளி -- ஒரு கருவி உழி - இடம் உலை - உலைக்களம் உளை - பிடரி மயிர் உழை - மான், பக்கம் உல்கு - சுங்கம் உள்கு - நினை எல் - பகல் எள் - ஒரு தானியம் ஒலி - சத்தம் ஒளி - பிரகாசம் ஒழி -- இல்லாமல் செய்தல் கலம் - மரக்கலம், பாத்திரம் களம் - போர்க்களம், நெற்களம் கலங்கு - கலகம் அடைதல் கழங்கு - மகளிர் விளையாட்டுப் பொருள் கலி - ஓசை, கலியுகம் களி - மகிழ்ச்சி கழி - உப்பங்கழி, கரும்பு கலை - ஆண் மான், வித்தை களை - அயர்ச்சி, பயிரில் கலை கழை - மூங்கில், கரும்பு காலி - பசுக்கூட்டம் காளி - ஒரு தெய்வம் காழி - மலம், சீகாழி என்னும் ஊர் காலை - நாளின் ஒரு பகுதி காளை - எருது கிளவி - சொல் கிழவி - முதுமை அடைந்தவள் குளம்பு - விலங்கின் குளம்பு குழம்பு - (மோர், வற்றல்) குழம்பு கூலி - சம்பளம் கூளி - பேய் கொலு - அரச சபை, பொம்மைகளின் அணி கொளு - குறிப்பான விளக்கம் கொழு - பற்றுக்கொடு கொலை - கொல்லுதல் கொளை - பாட்டு கோல் - கொல்லு கொள் - வாங்குக கோல் - ஊன்றுகோல், அம்பு கோள் - புறங்கூறுதல் சூலை - ஒருவகை நோய் சூளை - செங்கல் சுடும் இடம் |
குல் - கருப்பம் குள் - சபதம் குழ் - சுற்று தலை - ஓர் உறுப்பு தளை - காட்டு விலங்கு தழை - இலை தவலை - ஒரு பாத்திரம் தவளை - ஒரு உயிருள்ள பிராணி தால் - நாக்கு, தாலாட்டு தாள் - முயற்சி, கால் தாழ் - பணிந்து போ துலை - தராசு துளை - துவாரம் தோல் - சருமம் தோள் - புயம் நலி - வருந்து நளி - நெருக்கம் நல்லார் - நல்லவர் நள்ளார் - பகைவர் பல்லி - கௌளி பள்ளி - பள்ளிக்கூடம், படுக்கை பசலை - மகளிர் நிற வேறுபாடு பசளை - ஒரு வகைக் கொடி பால் - பசு தரும் பால் பாள் - தாழ்ப்பாள் பாழ் - வீணாகுதல் பாலை - ஒரு வகை நிலம் பாளை - மரத்தின் பனை புலி - வேட்டை விலங்கு புளி - புளி மரம் புளுகு-புனுகு புழுகு- பொய் சொல் போலி - உண்மை போல் இருப்பது போளி - ஒரு வகை இனிப்பு அப்பம் மல்லர் - மற்போர் செய்வோர் மள்ளர் - உழவர் மால் - மயக்கம் மாள் - இற முலை - தாய்ப்பால் சுரக்கும் இடம் (நாளம்) முளை - விதையின் முளை முழை - குகை மூலை - ஓரம் மூளை - தலைக்குள் உள்ள ஒரு பகுதி வலி - வலிமை வளி - காற்று வழி - பாதை வலை - மீன் பிடிக்கும் வலை வளை - சங்கு வழை - சுரபுன்னை மரம் வாலை - இளம்பெண் வாளை - ஒரு மீன் வாழை - ஒரு மரம் வால் - மிருகங்களின் ஒரு உறுப்பு வாள் - ஒரு ஆயுதம் வாழ் - வாழ்ந்திடு விலக்கு - மாற்று விளக்கு - தீபம் விலா - மார்பின் கீழ் உள்ள ஒரு பகுதி விளா - ஒரு மரம் விழா - சுபநிகழ்ச்சி விளி - அலை விழி - கண் விலை - கிரயம்( பொருளின் பெறுமதிக்கு கொடுக்கப்படும் பணத் தொகை) விளை - உண்டு பண்ணு விழை - விரும்பு வேல் - ஒரு படைக்கலம் வெள் - மன்மதன் வேலை - கடல் வேளை - பொழுது |
இந்த இணையதளத்தில் தொடர்ந்தும் கற்றுக்கொள்ள, வாசிக்க எங்கள் இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளுங்கள் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை எங்கள் இணையதளத்தில் நீங்கள் எழுதவும் முடியும்.