உலக பிரெய்லி தினம் World Braille Day
பார்வையற்றவர் இலகுவாக தொட்டு உணர்ந்து வாசிக்கக்கூடிய எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 4ஆம் திகதி "உலக பார்வையற்றோர் தினம்" அல்லது "உலக பிரெய்லி தினம்" என அழைக்கப்படுகின்றது.
பிரெய்லி எனப்படுவது பார்வை குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தொட்டு உணரக்கூடிய எழுத்துமுறை...
பிரெய்லி எனப்படுவது பார்வை குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தொட்டு உணரக்கூடிய எழுத்துமுறை இம்முறையானது ஒரு காகிதத்தில் சிறு சிறு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு எழுத்துக்கு மேல்மட்டத்தில் இரண்டு புள்ளிகளும் கிடைமட்டமாக மூன்று புள்ளிகளும் ஆக மொத்தம் ஆறு புள்ளிகள் இருக்கும். இந்தப் புள்ளிகளுக்கு இடையில் குழிவாக இருக்கும்.
புள்ளிகளின் அடிப்படையில் பார்வை குறை உடையோர் அதைத் தொட்டு உணர்ந்து அந்தப் அந்தப் பகுதிகளை வாசிக்கக் கூடியதாக இருக்கும். இயல்பாகவே பிறவியிலிருந்தே பார்வைத்திறன் குறைந்த நபர்களுக்கு தொட்டு உணரும் திறன் அதிகமாகவே காணப்படும். இதன் அடிப்படையிலேயே இந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரெய்லி எழுத்துகளை எழுதுவதற்காக விசேட எழுத்து கருவிகள் உள்ளன. விசேடமாக வடிவமைக்கப்பட்ட டைப்ரைட்டர் களும் உள்ளது.
பிரெய்லி டைப்ரைட்டர் |
லூயிஸ் பிரெய்லி
பிரெய்லி எழுத்து எனப்படுவது சிறுவயது விபத்தின் விளைவாக பார்வையை இழந்த லூயிஸ் பிரெய்லி இன் பெயரை பிரெய்லி எழுத்துகளுக்கு பெயரிட்டுள்ளனர். 1824 ஆம் தனது 15 வயதில் இருளில் எழுதும் எழுத்தாக பிரெய்லி எழுத்துக்கான குறியீட்டை உருவாக்கினார் அவர் தனது அமைப்பை 1829 பின்னர் ஏழாம் ஆண்டு திருத்திய இரண்டாம் பதிவு வெளியிடப்பட்டது இந்த எழுத்துகள் செல்கள் எனப்படும் செவ்வக தொகுதிகள் உள்ளன. அவை உயர்த்தப்பட்ட புள்ளிகள் எனப்படும் சிறிய புடைப்பு களை கொண்டுள்ளன இந்த புள்ளிகளின் எண்ணிக்கை மாறுபடும் எழுத்தை மற்றையதுடன் ஒப்பிட்டு வித்தியாசங்களை கண்டு கொள்ள முடியும்.உங்கள் பார்வைக்கு மேலதிக இணைப்புகள்