உலக சமூக நீதி தினம்/ World Day of Social Justice
உலக சமூக நீதி, சமூக நீதி என்பது உலக நாடுகளுக்கு இடையில் அமைதியான மற்றும் வளமான, சௌபாக்கியம் மான, சுகவாழ்வுக்கான அடிப்படைக் கொள்கையாவும் ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றின் உள்ளடக்கப்பட்ட கருத்தின்படி பாலின சமத்துவத்தை அல்லது பழங்குடி மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை ஊக்குவிக்கும் சமூக நீதிக்கான கொள்கைகளை ஆதரித்தல் என்பதாகும்.
பாலினம், வயது, இனம், மதம், கலாச்சாரம், அல்லது இயலாமை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றுவதன் மூலம் சமூக நீதியை முன்னேற்றுதல். இதுவே ஐக்கிய நாடுகள் சபையின் சமூக நீதிக்கான கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையை பொருத்தவரை அனைவருக்கும் நீதியை தொடர்ந்து வழங்குவது, மானிட சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான உலகளாவிய பணியின் மைய பொறுப்பைக் கொண்டுள்ளது. சமூக நீதிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோட்பாட்டின் சமீபத்திய எடுத்துக்காட்டு. வேலைவாய்ப்பு சமூகப்பாதுகாப்பு சமூக உரையாடல் மற்றும் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பணியில் உள்ள உரிமைகள் மூலம் அனைவருக்கும் நியாயமான தனி பலன்களை இந்தப் பிரகடனம் கவனம் செலுத்துகிறது.
உலகமயமாக்கலின் சமூகப் பரிணாமம் குறித்து உலகப்பொது அறிக்கையை தொடங்கிய முதல் தரப்பு ஆலோசனைகளின் விளைவு இது. பல்வேறு நாடுகளுக்கு இடையிலும் பரஸ்பர சமாதான பாதுகாப்பு கொள்கைகளை பராமரிப்பதற்கும் சமூக நீதி சமூக அபிவிருத்தி இன்றியமையாதது என்பதை வலியுறுத்துவதாக இந்த அமைப்பு அமைந்துள்ளது.
உலகமயமாக்கல் தாக்கத்தினால் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் வர்த்தக முதலீடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மூலம் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் முழுஉலகிலும் உள்ள வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் புதிய வாய்ப்புகளை திறந்து விடுவதை இது அங்கீகரிக்கிறது. கடுமையான நிதி நெருக்கடிகள், பாதுகாப்பின்மை, வறுமை, சமூகங்களுக்கிடையில் சமத்துவமின்மை உள்ளிட்ட தீவிர சவால்கள் , மேலும் வளரும் நாடுகளுக்கான உலகளாவிய பொருளாதாரத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பில் ஏற்படும் கணிசமான தடைகள், அத்துடன் மாற்றத்தில் பொருளாதாரம் கொண்ட சில நாடுகளை கருத்தில் கொண்டு
நவம்பர் மாதம் 26ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு பொது சபை பொதுச்சபையின் 63ஆம் அமர்வில் பெப்ரவரி 20 ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது
ஆதாரம்: un org இணையதளம் World Day of Social Justice