உலக சுங்கத்துறை தினம் ஜனவரி 26
சர்வதேச சுங்கத்துறை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அன்று சர்வதேச சுங்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் சுங்க துறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானது நாட்டிற்கு உள்ளே வரும் எந்த ஒரு பொருளாய் இருந்தாலும் வெளியே செல்லும் பொருள்களையும் அவதானிப்பது அவற்றுக்கு வரி விதிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு நாட்டிற்கு பெரும் பாதுகாப்பாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள். போதைப்பொருள் கடத்தல் அனுமதியற்ற சட்டத்திற்குப் புறம்பான பொருட்களை கடத்துவது ஒரு நாட்டில் ஏற்றுமதி செய்யக்கூடாத அல்லது இறக்குமதி செய்ய கூடாத பொருட்கள் நாட்டிற்குள் கொண்டு வராமல் இருப்பதற்காக இவர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவார்கள் உலகம் முழுவதிலும் உலக சுங்கத்துறை அமைப்பில் (WCO) உள்ள உறுப்பினர்கள் இந்த தினத்தை ஒரு விஷேட தினமாக கொண்டாடுவார்கள்
இத்தினத்தில் அவர்கள் துறை சார் ஒன்று கூடல்கள் மாநாடுகள் மற்றும் இத்துறையில் சிறப்பாக செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும்.
சுங்க அதிகாரிகளின் முக்கியமான கடமைகள்:
- சர்வதேச வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் கட்டுப்பாட்டை பயன்படுத்தல்.
- மாநில எல்லைகளைக் இடையே கணக்கிடப்பட்ட பகுதிகளில் சுங்கவரி மற்றும் வரிகளை மதிப்பீடு செய்தல் வசூலித்தல்
- கடத்தல் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் சுங்க மோசடிகளை தடுப்பது
சுங்கத்துறை என படுவதை இலகுவாக புரிந்து கொள்வது எப்படி?
இது இலகுவாக புரியும்படி சொல்வது ஆனால் நாம் அனைவரும் டிவிகளில் பார்த்திருப்போம் செய்திகளில் பார்த்திருப்போம் வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டு வந்த தங்கம் அல்லது போதைப் பொருள் அல்லது வெளிநாட்டு பணம் போன்றவைகள் விமான நிலையங்களில் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வரும் அல்லது கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட ஏதேனும் பொருட்கள் சட்டத்துக்கு விரோதமாக கடத்திவரப்பட்ட தாகவும் அவை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் பார்த்திருப்போம் எதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்னவென்றால் சுங்க அதிகாரிகள் எனப்படுபவர்கள் மேற்குறிப்பிட்ட கடமைகளை செய்வதற்கு விசிட அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட ஒரு பிரிவினர் ஆவர் இவர்கள் நாட்டின் போலீஸ் ராணுவம் போன்ற விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் ஒரு பிரிவினரே ஆனால் இவர்களின் கடமை மேலே குறிப்பிட்டது போல சில குறிப்பிட்ட வரையறைக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுங்க திணைக்கள முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள்:
முகவரி : இலங்கை சுங்கத் திணைக்களம்
இல: 40
மெயின் ஸ்ட்ரீட்
கொழும்பு 11 இலங்கை
Sri Lanka Customs
No.40,
Main Street,
Colombo 11, Sri Lanka.
Tele: +94 11 2143434
Tele: +94 11 2221602-3
Tele: +94 11 2221607
Tele: +94 11 2221611
Tele: +94 11 2221713
Fax: +94 11 2446364
E-mail: dgc@customs.gov.lk
CUSTOMS INFORMATION CENTER:
+94 11 2143434 Ext.7030
இணையதள முகவரி : http://www.customs.gov.lk/