International mother language day/ சர்வதேச தாய்மொழி தினம்.
பெப்ரவரி மாதம் 21ம் திகதி உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்படும் இத்தினமானது 1952-ஆம் கிழக்கு பாகிஸ்தான் தலைநகரான தாக்காவில் வங்காள மொழியை அரச கரும மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகம் முழுவதும் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. அது 2000மாம் ஆண்டு தொடக்கம் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நாள் ஒரு துக்க தினமாகவும் வங்காளதேசத்தின்னரால் அனுஷ்டிக்கப்படுகின்றது. காரணம் அவர்களின் மொழி உரிமைக்காக உயிர் நீத்தவர்களின் நினைவாக இந்த நாளை விசேட நாளாக கொண்டாடுகின்றார்கள். உண்மையில் மொழி உரிமையானது ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவ கௌரவத்தை கொடுக்கின்றது. மொழி மறுக்கப்படுகின்ற பொழுது தனது சமூகமே மறுக்கப்படுகின்றதாக உணர்கின்றார்கள் நம் தமிழ் மொழியிலும் கூட அனேக இடையூறுகள், மொழி மறுப்பு கொள்கைகள் பல இடங்களிலும் நடைபெறுகின்றது. இன்று நம் தமிழ் மொழியிலும் மொழிக்காக போராடும் குழுக்கள், மொழி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மொழிக்காக, மொழி வளர்ச்சிக்காக, இருப்புக்காக போராடி உயிர்நீத்தவர்களும் அனேகர் தமிழ் மொழியில் உண்டு. அவரவர் மொழியில் அவரவருக்கு ஒரு பற்றுதல் இருக்கும்.
ஆனாலும் சில பழமை வாய்ந்த மொழிகள் கலாச்சார சமூக விழுமியங்கள், கோட்பாடுகள் மற்றும் தனித்துவ இலக்கணம், பல்லாண்டு கால வரலாறுகள் இருக்கும் அவ்வாறான மொழியைப் பேசுவோர் அந்த மொழியை குறித்து பெருமிதம் அடைவார்கள் எக்காரணத்திற்காகவும் அந்த மொழியை விட்டுக்கொடுக்க மனம் இராது. அந்த வரிசையில் நம் தாய்மொழியான தமிழ் மொழியும் அடங்கும் உலகின் மிகப் பழமையான மொழிகளில் நமது தாய்மொழியான தமிழ் மொழியும் அடங்கும்.
எனவே உலக தாய்மொழி தினத்தில் நாமும் விசேடமாக எமது தாய் மொழியை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம் அதன் அபிவிருத்தி மேம்பாடு, நவீன யுகத்தின் நவீன சாதனங்களுக்கு மத்தியில் அதன் பயன்பாடு, நம் தாய் மொழியில் சகலதையும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குதல் என்பன நாம் சிந்திக்க வேண்டிய காரணங்களாகும்.
தமிழ் மொழிக்கு எதிரான சவால்
தமிழ் மொழி அதிகம் பேசப்படுகின்றதில் முதலாவது
இந்தியாவின் தமிழ்நாடு. 60,793,814
இரண்டாவது இலங்கை. 3,113,247
மூன்றாவது மலேசியா. 1,396,000
ஆதாரம் : wikipedia
இந்த பிரதான மூன்று நாடுகளிலும் தமிழ் மொழிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவது, மொழி உரிமை மறுக்கப்படுதல் அல்லது பாகுபாடு என்பன வெகுவாக காணப்படுகின்ற இந்தியாவின் இந்தி மொழியின் ஆதிக்கம், ஆங்கில மொழி தாக்கத்தால் தமிழ் மொழி கல்வி கற்றலில் உள்ள சவால்கள் போன்றவைகள் காணப்படுகிறது. இலங்கையில் மொழி புறக்கணிப்பு, சிங்கள மொழி ஆதிக்கம், ஆங்கில மொழி ஊடுருவலால் ஏற்பட்டுள்ள தாக்கம். இவ்வாறான நிலையில் இந்தத் தாய்மொழி தினமானது அவரவர் மொழிக்கு மொழியின் இருப்பு புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய ஒரு நாளாக அமையும் உண்மையில் இந்த நாள் நினைவு கூறப்பட வேண்டிய ஒரு அவசியமான நாள் சர்வதேச தாய்மொழி தினம். நன்றி!
இக்கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வருட இறுதியில் எமது இணையதளத்தின் நடத்தப்படும் பொது அறிவு போட்டி தயாராகுங்கள் அதற்காக எங்கள் இணையதளத்தில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.