காதலர்கள் தினம் / Valentine's Day / (lovers day)
" உலக காதலர் தினம் " அதாவது உலகில் வாழும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு தினமே உலக காதலர் தினம் ஆகும்.
இது காதலர்கள் மற்றுமின்றி நண்பர்களாலும், திருமணமான தம்பதியினர் ஆளும் கொண்டாடப்படுகிறது. நண்பர்களால் கொண்டாடப்படுவதால் இது "அன்பர்கள் தினம்" எனவும் கூறப்படுகிறது. இந்த நாள் மேற்கத்திய உலக கொண்டாட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் காதலர்கள் தங்களது காதலை தனது காதலிக்கோ, அல்லது காதலனுக்கோ, சொல்லும் வேளையில் பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். இதய வடிவிலான உருவங்கள், புறாக்கள், சிறகுகள் உள்ள தேவதையின் உருவங்கள், தாஜ்மஹால் போன்ற உருவங்கள், இனிப்பு பண்டங்கள் போன்ற பரிசுகளை வழங்குவார்கள். இந்த நாள்" உண்மையான காதல்" என்ற கருத்து தழைத்தோங்கி கொண்டிருந்த உயர் மத்திய காலத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி சாசர் வட்டத்தில் உருவாகியிருந்த ரொமான்டிக் காதல் என்ற விஷயத்தோடு தொடர்பு கொண்டிருந்தது.
காதலர் தின வரலாறு
1847 ஆண்டு" எஸ்தர் ஹாவ்லன்ட்" தன்னுடைய வீட்டில் ஆங்கிலேய உரு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வாலண்டைன் அட்டைகளை தனது கைகளாலே செய்தார். இன்று நாம் கொண்டாடும் இந்தக் காதலர் தினத்துக்கு ஒரு வரலாறு உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசின் கீழ் கிறிஸ்தவர்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டு கஷ்டப்படுத்த பட்டார்கள். அவர்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் ஒரு கிறிஸ்தவ மத போதகராக செயின்ட் வாலண்டைன்
இருந்தார். அவர் கிறிஸ்தவர்களுக்கு சேவை செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை குள்ளே குருடர்களாக இருந்தவர்களுக்கு பார்வையை மீட்டுக் கொடுத்தார். ரோமானிய பேரரசர் கிறிஸ்தவ வீரர்கள் திருமணம் செய்ய தடை விதித்திருந்தார். காரணம் போர்களில் அவர்களின் வீரம், ஆளுமை குறைந்துவிடும் என்ற எண்ணத்தில். ஆனால் செயின்ட் வாலண்டைன் அரசுக்குத் தெரியாமல் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு திருமணம் நடத்தினார். இதையறிந்த ரோமானியப் பேரரசு செயின்ட் வாலண்டைனை பெப்ரவரி பதினான்காம் திகதி கொன்று அடக்கம் செய்தான்.
அதேபோன்று புனித காதலர் விருந்து கி.பி 496 இல் முதலாம் போப் ஜெலசியஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இது கி.பி 269இல் இறந்த ரோம் புனித காதல் நினைவாக பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்பட்டது. 14ம்,15ம் நூற்றாண்டில் நீதிமன்றம் அன்பின் கருத்துக்கள் வளர்ந்தபோது வசந்த காலத்தின் ஆரம்பத்தில்" லவ் பேர்ட்ஸ்" மூலம்18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாக வளர்ந்தது.
இனிப்புகள், 💗💗🍬🍬🍬🍭🍭💗💗
அனுப்புவதால் காதலர் என்று அழைக்கப்பட்டன. இதுவே நாம் கொண்டாடும் காதலர் தினத்தின் வரலாறாக காணப்படுகிறது.
இன்று அனைத்து நாடுகளிலும் இந்த நாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஆரம்ப நாடாக இங்கிலாந்து விளங்கினாலும் தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா, இலங்கை போன்ற எல்லா நாடுகளிலும் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பகிர்ந்து கொள்ளும் நாளாக இந்த பெப்ரவரி 14ம் திகதி விளங்குகிறது.
பரிதுரைகள்:-
சர்வதேச நிறுவனங்கள்
உலகில் அதிகம் பேசப்படும்10 மொழிகள்
ஐக்கிய நாடுகள் சபை - uno
International Days / சர்வதேச தினங்கள்
தமிழ் இலக்கணம் - லகர,ளகர,ழகர உச்சரிப்பு முறைகள்
கட்டுரை எழுதுவது எப்படி?
பஞ்சகருவி என்றால் என்ன? / Geography in Tamil
ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?/ What to do to increase memory power?
இக்கட்டுரையானது பொது அறிவு கட்டுரைத் தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது. எங்கள் இணையதளத்தில் பொது அறிவு கேள்வி பதில் போட்டி டிசம்பர் மாதம் நடாத்தப்படும் .வெற்றி பெறும் 50 நபர்களுக்கு ஆறுதல் பரிசும், 20 நபர்களுக்கு விசேட பரிசும், முதலாம் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு விசேட சான்றிதழ்களும் பரிசும் வழங்கப்படும்.
நீங்கள் எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி.