10 most spoken languages in the world
உலகில் அதிகமானோர் ஆங்கில மொழியை பேசுகின்றார்கள். ஆனாலும் மாண்டரின் சீனமொழியை சொந்தத் தாய் மொழியாக பேசுவோரின் எண்ணிக்கை அதிகம்.உலகில் அதிகம் பேசப்படும் பத்து மொழிகளை கீழே காணலாம்...
உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?
உலகில் அதிகம் பேசப்படும் பத்து மொழிகள் என்ன ?
உலகில் அதிகமானோர் ஆங்கில மொழியை பேசுகின்றார்கள் ஆனால் தாய் மொழியாக ஆங்கிலத்தை பேசுவோர் குறைவு உலகில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் இவ்வாறு கணக்கிடும்போது ஆங்கில மொழி உலகின் மிகப்பெரிய மொழியாக முதலிடத்தை பெறுகின்றது. ஆனாலும் மாண்டரின் சீனமொழியை சொந்தத் தாய் மொழியாக பேசுவோரின் எண்ணிக்கை அதிகம் இதனடிப்படையில் உலகில் அதிகம் பேசப்படுகின்ற மொழி மாண்டரின் சீன மொழியை குறிப்பிடலாம். இந்த மொழியானது உலகில் குறிப்பிட்டு 36 தேசங்களில் மாத்திரம் அதிகமாகப் பேசப்படுகின்றது.சீனர்களின் ஜனத்தொகை உலகளாவிய ரீதியில் அதிகம் என்பதால் அவர்கள் பேசும் மொழியும் முதலிடத்தை பெறுகின்றது.
ஆங்கில மொழி 146 நாடுகளில் பேசப்படுகின்றது. மிக வேகமாக வளர்ச்சிக்காணும் ஒரு மொழியாக ஆங்கில மொழி திகழ்கின்றது.
ஆங்கில மொழி உலகில் வளர்ச்சி அடைய காரணம் என்ன?
உலகளாவிய ரீதியில் பிரித்தானிய பேரரசின் காலனிதத்துவ நாடுகாண் பயணங்கள் மற்றும் காலனித்துவ ஆட்சி. அதன் பின்னரான காலங்களில் மேலைத்தேய கலாச்சாரத்தின்பால் மக்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு என்பவைகளை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. இன்று நவீன தொழில்நுட்பத்தின் ஆங்கிலத்தில் தேவைப்பாடு மற்றும் தொடர்பாடல் துறையில் ஆங்கில தேவைப்பாடு என்பவை ஆங்கிலத்தின் தேவையே உலகளாவிய ரீதியில் அதிகரிக்கச் செய்துள்ளது. அதில் ஒரு முக்கிய இடமாக கணனி மற்றும் கணினி மென்பொருட்கள் இருக்கின்றது.
உலகில் அதிகம் பேசப்படுகின்றது முதல் பத்து மொழிகள் என்ன?
1. ஆங்கிலம் 1348 மில்லியன்2. மாண்டரின் சீனம் 1120 மில்லியன்
3. ஹிந்தி 600 மில்லியன்
4. பெனிஸ் 543 மில்லியன்
5. நிலையான அரபிக் (Standard Arabic) 274 மில்லியன்
6. பெங்காலி 268 மில்லியன்
7. பிரான்ச் 267 மில்லியன்
8. ரஷ்யன் 258 மில்லியன்
9. போர்த்துகீசியம் 258 மில்லியன்
10. உருது 230 மில்லியன்
- மேலும் காண்க
- https://www.visualcapitalist.com/the-worlds-top-10-most-spoken-languages/
- https://danivoiceovers.com/en/most-spoken-languages-in-the-world/