ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?
How To Make Money Online?
பொருளடக்கம்
டொமைன் பெயர்கள்
ஆன்லைன் வியாபாரம் (online business)
ஆன்லைன் விளம்பரங்கள் (Online ads)
ஆன்லைன் சேவைகள்(online services)
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு பலதரப்பட்ட வழிவகைகள் உள்ளது. ஆனாலும் மிகவும் நம்பிக்கையான சில வழிமுறைகள் பொது அறிவுக்காக நீங்கள் தெரிந்துகொள்ள உங்களுக்கு நாங்கள் தொகுத்து தருகின்றோம்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முழு நேரம் ஆன்லைன் வேலைகள் மற்றும் பகுதிநேர ஆன்லைன் வேலைகள் என பலதரப்பட்டவை உள்ளது. நீங்கள் ஏற்கனவே ஒரு தொழில் செய்பவராக இருந்தால் பகுதி நேரமாக சில ஆன்லைன் தொழில்களை செய்ய முடியும். அல்லது நீங்கள் ஒரு வேலை தேடுபவராக இருந்தால் முழு நேர வேலையாக கூட இணையதளத்தில் ஆன்லைன் தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆன்லைன் தொழில் வாய்ப்புகள் பிரதான இரண்டு வகை உண்டு.
ஒன்று ஆன்லைன் மூலமாக ஏற்கனவே தொடங்கப்பட்ட ஓர் இணைய தளத்தின் கீழ் நீங்கள் freelancer ஆகவோ, அல்லது நீங்கள் வேலை செய்ய தேர்ந்தெடுத்த இணையதளத்தில் அவர்கள் விரும்பும் வேலையை நீங்கள் செய்து கொடுப்பதன் மூலமாக பணம் ஈட்ட முடியும்.
இரண்டாவது முறை நீங்கள் சொந்தமாக உங்களுக்கு என்ன ஒரு இணையத்தளத்தை உருவாக்கிக் கொள்ளுதல் அல்லது ஒரு யூடியூப் சேனல் உருவாக்கிக் கொள்ளுதல் மேலும் சமூக ஊடகங்களின் மூலமாக வியாபாரங்களை மேற்கொள்ளுதல் அல்லது சேவைகளை மேற்கொள்ளுதல் அதன்மூலம் பணம் ஈட்டுதல் அல்லது நீங்கள் சுயமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதன் மூலமாக மற்றும் ஆன்லைன் பயிற்சி பட்டறைகள் நடத்துவதன் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
இரண்டாவது வழிமுறைக்கு அதிக நேரம் தேவைப்படலாம் ஆனால் முதலாவது வழிமுறைக்கு உங்கள் விருப்பம் போல நேரம் எடுத்து வேலை செய்யலாம்.
இணையத்தளத்தை உருவாக்கி எப்படி சம்பாதிப்பது?
- இணையதளத்தில் உருவாக்குவதற்கு முன்னர் நீங்கள் எதை சார்ந்து இணையதளம் உருவாக்க போகின்றீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
- நீங்கள் தினமும் அதிக அதிகமாக இணைய தளம் சம்பந்தமாக கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் எளிதானது யூடியூப் தளத்தில் இதற்கான நிறைய வீடியோக்கள் உள்ளது.
- புதிதாக இணையதளம் ஆரம்பிப்பவர்கள் கூகுள் தயாரிப்பான Blogger ஒரு சிறந்த தேர்வு.
இந்த இணையதளத்தை இலவசமாக பயன்படுத்தி தங்களுக்கான ஒரு தனித்துவமான ஒரு இணையதளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். Blogger இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்... Blogger
இணையதளம் குறித்த அடிப்படை பொது அறிவு
குறிப்பு:-
இந்த விளக்கங்கள் சாதாரணமாக யாரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப சொற்பதங்களை தவிர்த்து முடிந்தவரை இலகுவான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 👀👀👀 😃😃
இந்த விளக்கங்கள் சாதாரணமாக யாரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப சொற்பதங்களை தவிர்த்து முடிந்தவரை இலகுவான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 👀👀👀 😃😃
இணையதளம் என்பது மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்
- சேமிப்பகம் (server,Storage)
- இணையதள தீம்ஸ்
- டொமைன் பெயர்கள்
சேமிப்பகம்
இணையதள தகவல்களை ஓர் இடத்தில் சேமித்து வைத்து அதை தனிப்பட்ட கணினிகளுக்கு வினியோகிக்கும் இடம். இதை இலகுவாக சொல்வது என்றால்; பொருட்களை சேமித்து வைக்கும் களஞ்சியத்திற்கு ஒப்பிடலாம். பிளாக்கர் இணையதளத்திற்கு கூகுள்லால் வழங்கப்படும் முற்றிலும் இலவசமான சேமிப்பக த்தை பயன்படுத்த முடியும்.
இணையதள தீம்ஸ்
இதை ஒரு ஷோரூமுக்கு ஒப்பிடலாம். நமது களஞ்சியசாலையில் எவ்வளவு பொருட்கள் இருந்தாலும் அது அழகாக காட்சி படுத்தப்படும் ஒரு ஷோரூமில் வைக்கப்பட்டிருந்தால் அதன் விற்பனை அதிகரிக்கும். ஒரு ஷோரூம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கின்றதோ, அல்லது எவ்வளவு நேர்த்தியாக அழகாக இருக்கின்றதோ அதைப் பொறுத்து மக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடுவார்கள். அது போல தான் நமது இணையதளத்தில் வடிவமைப்பு பயனாளர்களை கவரக்கூடியதாக வேண்டும்.
கூகுள் பிளாக்கர் தளத்தில் முற்றிலும் இலவசமான தீம்கள் உள்ளன அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனாலும் லாப நோக்கத்தோடு விளம்பரம் மூலமாக பணம் இடுவதற்கு நாம் சிறிதளவு முதலீடு செய்து மிக அழகான பிளாக்கர் இணையதள தீம்ஸ்களை கொள்வனவு செய்து பயன்படுத்த முடியும் நீங்கள் தற்பொழுது இந்த கட்டுரையில் வாசித்துக் கொண்டிருக்கும் இணையதளத்தில் கூட அவ்வாறான ஒரு தீம்ஸ் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. தீம்ஸ்களைகொள்வனவு செய்ய வேண்டுமா கீழே உள்ள இணைப்புகளில் பார்வையிடுங்கள்.
டொமைன் பெயர்கள்
டொமைன் பெயர் என்பது உங்கள் வியாபார ஸ்தலத்திற்கு நீங்கள் வைக்கும் ஒரு அழகான பெயரை போன்றது. டொமைன் பெயர்களில் பல வகைகள் உள்ளது அவற்றில் சர்வதேச ரீதியாக பயன்படுத்தக்கூடிய அதிக மக்களால் பயன்படுத்தப்படும் . com, info, net, edu, and org, போன்றவைகள் காணப்படுகின்றது. இவற்றை நீங்கள் வாங்கி உங்கள் Blogger இணையதளத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உங்களுக்கு மிகக் குறைந்த விலையில் டொமைன் பெற்றுக்கொள்ள கீழே காட்டப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.