online writer job in Tamil
நீங்களும் எழுதலாம் பணம் சம்பாதிக்கலாம்
உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பகுதி நேரமாக ஆன்லைனில் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்க விருப்பமா?
இதோ அதற்கு ஓர் அரிய வாய்ப்பு எங்கள் வலைத்தில் நீங்கள் எழுதுங்கள். உங்கள் கட்டுரைகளில் எங்கள் வலைத்தளத்தில் பிரசுரித்து அது அதிகமான அளவு மக்களை கவரும்மாக இருந்தால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்
எவ்வாறான கட்டுரைகளுக்கு பணம் செலுத்தப்படும்?
மிகவும் நல்ல தரமான எதிர்பார்ப்புகள் கூடிய கட்டுரையாக இருந்தால் அதற்காக நாங்கள் உங்களுக்கு பணம் செலுத்த தயாராக உள்ளோம். அதை நாங்கள் எவ்வாறு செலுத்துகின்றோம்? உங்கள் கட்டுரைகளில் பெறப்படும் பார்வையைப் பொறுத்து உங்களுக்கான பணம் தீர்மானிக்கப்படும். உங்கள் கட்டுரைக்கான 20 % பதிப்புரிமை (Royalty) உங்களுக்கு வழங்கப்படும். இலங்கையில் உள்ளவர்களுக்கு நேரடியாக வங்கிகள் மூலமாகவும், வெளிநாட்டவர்களுக்கு "PayPal" அக்கவுண்ட் மூலமாகவும் பணம் அனுப்பப்படும்.
- பணம் பெற்றுக்கொள்ள நீங்கள் குறைந்தது பத்துக் கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும்.
- உங்கள் கட்டுரைகள் குறைந்தபட்சம் 1500 சொற்கள் இருக்க வேண்டும்.
உங்கள் தனித்துவம் பேணப்படும்
- நீங்கள் எழுதும் கட்டுரைகளை உங்கள் சொந்த பெயரிலேயே நீங்கள் பிரசுரிக்க முடியும்.
- நீங்கள் விரும்பினால் உங்கள் படம் அதில் பிரசுரிக்கப்படும்.
- கட்டுரைக்கு சொந்தக்காரர் நீங்கள் தான் என்பதை நீங்கள் அக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிடலாம்.
- அதை பிரசுரிக்கும் உரிமை மாத்திரம் எமது வலைத்தளம் கொண்டிருக்கும்.
ஆனாலும் நீங்கள் இந்த வலைத்தளத்தில் பிரசுரித்த வெளியிட்ட எந்த ஒரு கட்டுரையும் வேறு எங்கும் வெளியிட முடியாது. அல்லது வேறு எங்காவது வெளியிடப்பட்ட கட்டுரைகளை நீங்கள் இங்கே வெளியிட முடியாது. இவைகள் இணையதளத்தில் வேறு எங்காவது வெளியிடப்பட்டுள்ளது என்பதை
Plagiarism
பகுப்பாய்வு செய்து நாங்கள் உறுதிசெய்து கொள்வோம். அவ்வாறு காப்பி எடுக்கப்பட்ட பிரதிகள் நீங்கள் பிரசுரித்தால் உங்களுடைய கொடுப்பனவு முற்றிலும் நிறுத்தப்படும். மற்றும் நீங்களும் இவ்வலைதளத்தில் தடை செய்யப் படுவீர்கள். நீங்கள் எழுதுவது உங்களுடைய சொந்த கட்டுரையாக இருக்க வேண்டும். பொதுவான விடயங்களை நீங்கள் எழுதுவதாக இருந்தால் அதாவது பொது அறிவு சம்பந்தமான எந்த வலைத்தளத்திலும் மாறாது ஒரே கருத்துடைய தகவல்களை நீங்கள் எழுதுவதாக இருந்தாலும் அதே போல இன்னொரு வலைத்தளத்தில் இருக்கின்றதா என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்வோம்.பொதுவான விடயங்களை எழுதும்போது நீங்கள் அதற்காக ஒரு புதிய வடிவத்தை கொடுத்து எழுதுங்கள். அப்பொழுது மற்றைய எழுத்தாளர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும். அல்லது வேறு இணைய தளங்களில் இவை எழுதப்பட்டிருந்தாலும் அது பொதுவாக பெரிய அளவில் கருத்தில் கொள்ளப்படாது. உங்கள் கட்டுரைகள் அதிகமான அளவு பார்வையைப் பெற வேண்டுமென்றால் புதியவற்றை எழுதுங்கள். தன்னம்பிக்கைத் தொடர்கள், சிறுகதைகள், அல்லது பொது அறிவு சார்ந்த கட்டுரைகள் போன்றவற்றை எழுதுங்கள். அது முதல் முதலாக நீங்கள் எழுதியதாக இருந்தாள் அது அதிகமான அளவு பார்வைகளை பெரும்.
உங்கள் கட்டுரைகள் குறைந்தபட்சம் 1500 சொற்களை கொண்டிருக்க வேண்டும். அதற்குமேல் இருப்பது நல்லது நீங்கள் கட்டுரைகள் எழுதும்போது அதற்காக இணையதளத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துகளை பயன்படுத்துங்கள்.
ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சுயவிளம்பரம்.
அனேக துறைசார் ஆசிரியர்கள் தங்களுக்கென தனி ஒரு இணையதளம் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்கள் கல்வி பரப்புரைகளை மேற்கொள்கின்றார்கள். அவர்கள் எங்கள் இணையதளத்தில் தங்களது கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த விடயங்களை கட்டுரைகளாக எழுதமுடியும். அவர்களின் துறைசார் விளம்பரங்களையும் அவர்கள் எழுதிய கட்டுரையில் ஒரு கட்டுரைக்கு 728*90 அளவுகளில் இரண்டு விளம்பரங்களும், அல்லது 470*300 அளவுகளில் ஒரு விளம்பரம் என்ற அடிப்படையில் பிரசுரிக்க முடியும்.
இது உங்கள் கட்டுரையில் ஒரு பகுதியாகவே பிரசுரிக்கப்படும்.
சில குறிப்பிட்ட விளம்பரங்களில் கால அளவுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த விளம்பரம் காலாவதியான பின்னர் இணையதள நிர்வாகியால் நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்பட்டாலும் நீங்கள் எழுதிய கட்டுரையானது இணையதளத்தில் இருந்து நீக்கப்படாது. ஏற்கனவே ஒரு முறை விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் உங்கள் சொந்த விளம்பரங்கள் மீண்டும் பிரசுரிக்கப்பட மாட்டாது. அல்லது புதுப்பிக்க படமாட்டாது.
உங்கள் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பான கட்டுரைகளை எழுதுங்கள்.
தொடர்புகளுக்கு..
உங்கள் கேள்விகளை கீழே கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்கள் அல்லது எங்கள் மெசஞ்சரில் தொடர்பு கொள்ளுங்கள்.
அல்லது கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.