அவசரகாலச்சட்டம்
அவசரகாலச் சட்டம் என்றால் என்ன ?
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமானது இது அவசரகால சட்டம் என குறிப்பிட்டு கூறப்படுகின்றது. இந்த சட்டம் குறித்து விருந்து பொதுமக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு வேண்டும். ஏனென்றால் இலங்கையில் அடிக்கடி இந்தச் சட்டம் பொதுமக்கள் மத்தியில் பாய்கின்றது.ஆங்கிலத்தில் இதை state of emergency எனக் கூறுவார்கள்.
எவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்றது ?
இந்த அவசரகால சட்டம் ஆனது நாட்டில் தொடர்ந்து அமுலில் இருக்கும் சட்ட வகையைச் சார்ந்தது அல்ல. இது தேவை ஏற்படும்போது ஜனாதிபதியின் விஷேட அதிகாரத்தை பயன்படுத்தி அமலுக்கு கொண்டு வரப்படும் விசேட சட்டமாகும்.
விஷேட பிரகடனம் ஒன்றின் ஊடாக அவசரகால சட்ட நிலைமையினை நாட்டிற்கு அறிவிப்பதற்கான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது இதன்படி அரசியல் அமைப்பு உறுப்புரை 155 இப் பிரகடனமானது பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும். மேலும் இந்தச் சட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட்டு அவசரகால சட்டம் தொடர்பான விவாதம் நடத்தப்படும். இறுதியாக பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் சட்டம் தீர்மானிக்கப்பட்டு சட்டமாக்க படுகின்றது. இவ்வாறு அமுல்படுத்தப்படும் சட்டத்தினை இலங்கையில் எந்த ஒரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. இலங்கையின் அரசியலமைப்பின் சட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து சட்டங்களுக்கும் இது விதிவிலக்காக செய்யப்படும்.
அவசரகால சட்டம் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
அவசரகால சட்டத்தின் ஆயுட்காலம்
அவசரகால சட்டத்தின் விசேடமான அதிகாரங்கள்
நாட்டின் முப்படையினருக்கு விசேட அதிகாரம் கடமையில் இருக்கும் முப்படையை சேர்ந்த யாராக இருந்தாலும் அதாவது விசேட அதிரடிப்படை, கடற்படை, ராணுவம், போலீஸ் ஆகிய எந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆனாலும் யாரையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கைது செய்வதற்கான அதிகாரம்
இதன்போது யாராவது தப்பி செல்ல நினைத்தாள் அவர்களை உயர் அதிகாரியின் உத்தரவு இல்லாமலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான முழு அதிகாரமும் உண்டு.
யார் ஒருவரையும் சந்தேகநபர் என நினைத்த உடன் அவரை கைது செய்யும் அதிகாரம் உள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற எந்த ஒரு தேவைப்பாடும் சட்டத்தில் இல்லை.
தேவை ஏற்பட்டால் இவர்களை அதாவது இச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்டவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரிப்பதற்கான முழு அதிகாரம் இலங்கை அவசரகாலச் சட்டத்தில் உண்டு
இலங்கையில் இவ்வாறு கைது செய்யப்பட்டு இந்நாள் மட்டும் விசாரிக்கப்படும் சிறைக்குள் இருப்பவர்கள் இன்னும் அனேகர் இருக்கின்றார்கள்.