இலங்கை தேசிய கொடி
இலங்கை தேசிய கொடியின் படம்
இலங்கை தேசிய கொடியின் விளக்கம் என்ன ?
வாளேந்திய சிங்கம் வீரமும் அநீதிக்கு எதிரான போராட்டமும்
கொடியின் நான்கு மூலைகளிலும் உள்ள அரச இலை அரச இலைகள்
- உபேக்ஸா - நன்மை தீமை இரண்டையும் சமமாக கருதுதல்
- முதிதா - மற்றவர்கள் மகிழ்ச்சியில் தானும் மகிழ்தல்
- மெத்தா- அன்பு
- கருணா - காருண்யம், கருணை
சிங்கம் சிங்கள மக்கள்
இலங்கையின் தேசிய இலச்சினைகள்.
இலங்கை கொடி
இலங்கை தேசிய கொடியின் முக்கியத்துவம்
இலங்கை தேசிய கொடியின் நிறங்களின் அர்த்தங்கள் என்ன?
மஞ்சள் நிறம் இலங்கையின் பிற சிறுபான்மை இனங்கள் ( மலாய், பேகர், இலங்கை சீனர், பழங்குடியினர் )
செம்மஞ்சள் நிறம் - தமிழர்கள் ( இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் உட்பட)
பச்சை நிறம் - இலங்கை முஸ்லிம் இனத்தவர்கள்
வாளேந்திய சிங்கத்தை சூழவுள்ள காவி நிறம் (அடர் சிவப்பு) சிங்களவர்களை குறிக்கும்
இலங்கை தேசியக்கொடியை பற்றிய பொது அறிவு தகவல்கள்
இலங்கை தேசியக்கொடி கேள்வி பதில்கள்
- இலங்கையின் தேசிய கொடி முதல் முதலாக இப்போது ஏற்றப்பட்டது ? 1952-02-04 சுதந்திர தினமன்று முதன்முதலாக ஏற்றப்பட்டது.
- இலங்கையின் தற்போதைய தேசியக்கொடியை வடிவமைப்பதற்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்ட பழைய கொடி எது ?
கண்டி ராஜ்ஜிய கொடி |
- பிரித்தானியரின் ஆக்கிரமிப்புக்கு முன்னதான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின்; சிவப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற போர் வாள் ஏந்திய சிங்கக்கொடி. இக்கொடியின் முன்மாதிரியாகக் கொண்டே தற்போதைய புதிய இலங்கை தேசியக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
- 1972 குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி கொடியின் நான்கு ஓரங்களும் மஞ்சள் நிறம் இடப்பட்டது.
சிங்கக் கொடியை இலங்கையின் தேசியக் கொடியாக அறிவிக்க முன்மொழிந்தவர் யார் ?
- திரு. ஏ. சின்ன லெப்பை அவர்கள் (மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்) 1948 ஜனவரி 16ஆம் திகதி அரச பேரவையில் முன்மொழிவை தாக்கல் செய்தார்.
இலங்கை தேசிய கொடியை தயாரிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலோசனை குழுவில் யார் யார் உள்ளடங்கி இருந்தனர் ?
- திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, (தலைவர்) சேர். ஜோன். கொத்தலாவல, திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தன, திரு. டி. பி. ஜாயா, டாக்டர் எல். ஏ. ராஜபக்சே, திரு. ஜி.ஜி. பொன்னம்பலம், செனட்டர் எஸ். நடேசன் ஆகியோர்.
தற்போதைய இலங்கையின் தேசியக்கொடி எப்பொழுது அங்கீகரிக்கப்பட்டது ?
- 1953 மார்ச் 2ஆம் திகதி; ஆனாலும் இக்கொடியில் அரச இலைகள் மாதிரி வடிவத்தில் வரையப்பட்டிருந்தது.
இயற்கையான அரச மர இலைகள் போன்ற மாதிரி தேசியக்கொடியில் சேர்க்கப்பட்டது எப்போது ?
- 1972 ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி
தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பிரிவு எது ?
- 1978 / 9 /9 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு பிரிவு 6 இரண்டாம் அட்டவணையில் இலங்கை தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேசியக்கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்கள் எவை ?
- இலங்கை சுதந்திர தின விழாவின்போது
- தேசிய நிகழ்வுகளின் போது
- அரச நிகழ்வுகளின்போது
தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் சந்தர்ப்பம் எது ?
- தேசிய துக்க தினத்தில்
இலங்கை தேசிய கொடியை பயன்படுத்தும் சட்டதிட்டங்கள்
தேசியக்கொடியை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது 1979-1986 வரையிலான தொடர்ச்சியான குழுக்களின் ஒரு முழுமையான செயல்முறையின் மூலம் உள்துறை அமைச்சகத்தால் வரையப்பட்ட சட்ட ஒழுங்கு முறைகள்.
- வடிவமைப்பு இலங்கை SLS 693: 1985 என்ற தரத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.
- கொடியேற்றத்தின் போது தேசியக் கொடியானது மற்றைய கொடிகளுடன் நடுமத்தியில் உயரமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
- முதலாவதாக தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்; இறுதியாக தேசியக் கொடியை இறக்கவேண்டும்.
- தேசியக் கொடியுடன் சம உயரத்தில் சமமாகப் பறப்பதற்கு மத கொடிகளுக்கு உரிமையுள்ளது.
- மிகவும் அதிவிசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம் இரவு நேரத்தில் பறக்கவிடப்படலாம்; ஆனாலும் கொடிக்கம்பத்திற்கு பேஸ் லைட் மூலம் ஒளி பாய்ச்சுதல் அவசியம்.
- கொடி மரத்தை தவிர வேறு எங்கும் காட்சிப்படுத்தும் போது சிங்கத்தை நிமிர்ந்த நிலையில் காட்சிப்படுத்துதல் வேண்டும் .
- தேசிய தூக்க தினங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் முறை பின்வருமாறு..
- அரை கம்பம் எனக் கூறினாலும் உண்மையில் அது சரியாகவே அரை கம்பம் கிடையாது. தேசியக்கொடியை முழுமையாக ஏற்றப்பட்டு பிறகு கொடிக்கம்பத்தில் கீழிருந்து மேலாக மூன்று பங்கு மேலிருந்து கீழாக மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இறக்கி பறக்கவிடவேண்டும். மீண்டும் இரவில் இறக்கும்போது தேசியக்கொடியை மேலே உயர்த்தி பின்னர் கீழே இறக்க வேண்டும்.
- மேடையில் காட்சிப்படுத்தப்படும் போது அது பேச்சாளர்களின் வலது பக்கத்திற்கு பார்வையாளர்களுக்கு தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
- ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் போது தட்டையாகவோ அல்லது முறையற்ற கோணங்களிலும் எடுத்துச் செல்லக் கூடாது. தேசியக்கொடியை மற்ற கொடிகளைப் போல மரியாதை செலுத்தும் நோக்கில் யாரொருவர் மேலும் போர்த்த கூடாது. (குடியரசு தலைவர் உட்பட)
- இலங்கை தேசியக் கொடியானது நிலத்தைத் தொடும் வகையில் காட்சிப்படுத்தவோ, வைக்கவோ கூடாது.
- இலங்கை தேசிய கீதம் இசைக்கப்படும் போது அனைவரும் தேசியக் கொடியை நோக்கி நிற்கவேண்டும்.
- இலங்கை தேசியக் கொடியை எவ்வாறான ஒரு வகையிலும் தவறாக பயன்படுத்தக்கூடாது உதாரணமாக முறையற்ற முறையில் காட்சிப்படுத்துதல் அல்லது சிதைக்கப்பட்ட மங்கலான தேசியக்கொடியை காட்சிப்படுத்துதல் குற்றமாகும்.
- இலங்கை தேசியக்கொடியை அலங்காரமாக பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.
- எந்த ஒரு உடையிலும் தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது. இராணுவ வீரர்கள் மற்றும் முப்படையினர் உடைகளில் தேசியக்கொடி பெட்ச் படுத்த முடியும்.
பழைய தேசியக்கொடிகளை அகற்றுதல்
- பழைய தேசியக் கொடிகளை எரித்தல் போன்ற முறைகள் ஊடாக மரியாதையுடன் அகற்றப்பட வேண்டும். சில நாடுகளில் தேசிய கொடிகளை அகற்றுவதற்கு முறையான சடங்கு முறைகள் கை கொள்ளப்படுகின்றது.