இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள் / General knowledge about Sri Lanka
பொருளடக்கம்:
இலங்கை பற்றிய பொது அறிவு வினா விடை
- இலங்கையின் சிறப்பு பெயர்கள் என்ன? - இந்து சமுத்திரத்தின் முத்து இந்து சமுத்திரத்தின் நித்திலம்
- இலங்கை மிகப் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர் என்ன? - தம்பபன்னி
- இலங்கையின் முதலாவது வரைப்படத்தை வரைந்தவர் யார் ? - மார்க்கோபோலோ
- வரலாற்றை கூறும் நூல்கள் எவை ?- மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம்.
- குளவம்சத்தை இயற்றியவர் யார் ? - தர்மகீர்த்தி தேரர்.
- இலங்கையின் ஆதிக் குடிகள் யார் ? - இயக்கர், நாகர் என்ற திராவிட பரம்பரையினர்
- பூர்வீக மாகாணங்கள் எவை ? - ரஜரட்ட, மாயரட்ட, றுகுணுரட்ட
- இலங்கையின் சிறப்பைக் கூறும் வகையில் உருவாக்கப்பட்ட கப்பல் எது ? கிரியேட் சிப் ரோஹினி
- ஒருநாட்டின் பெருமை, கௌரவத்தை பிரதிபலிப்பவை எவை ? - தேசிய கொடி, தேசிய சின்னம்,
இலங்கை தேசியக்கொடி குறித்த மேலதிக தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யவும்இலங்கை தேசிய கீதம்
குறித்த விரிவான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்இலங்கையின் தேசிய சின்னம்
சிங்கம் - வீரம்
கலசம் (பூரணகும்பம்) - சௌபாக்கியம்
சந்திர சூரியர் - உலக நிலைப்பாடு
நெற்கதிர் - சௌபாக்கியம்
தர்ம சக்கரம் - தர்மமும் நீதியும்
தாமரை மலர் - தூய்மை
இலங்கையின் தேசிய மரம்
இலங்கையின் தேசிய மரம் எது?
இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
கரப்பந்தாட்டம்
இது 1991ம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்டது. 1895 இல் வில்லியம் ஜி. மோகன் என்பவரால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இவ் விளையாட்டு 1916 இல் றொபேர்ட் வோல்டர் கொமெக் என்பவரால் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் தேசிய மலர் எது?
நீலோற்பலம் / நீல அல்லி முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களினால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் தீர்வின் பிரகாரம் 1986-02-26 இல் தேசியமலராகத் தெரிவு செய்யப்பட்டது.
தேசிய உடை
1939 ம் ஆண்டளவில் அங்கீகரிக்கப்பட்டது.
சிங்கள மக்களின் தேசிய உடையாக
ஆண்கள் - நீளக்கை சட்டையும், வேட்டி அல்லது சாரமும்
பெண்கள் - ஒசரி சேலையும், ரவிக்கையும்.
சிறுமிகள் 'லமாசாரி' எனும் சேலையும் மடிப்புடைய ரவிக்கையும்.
தேசிய பறவை
காட்டுக்கோழி
தேசிய இரத்தினக்கல்
நீல மாணிக்கம்
பௌத்த கொடி
பௌத்த தர்மத்தின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் முன்னிட்டு பெளத்த பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு அக்குழுவின் கருத்துரைப்படி பௌத்தகொடி நிர்மாணிக்கப் பட்டது.
இக்கொடியின் முதல் பாதி உருவமைப்பு கரோலில் பூஜித குணவர்தன அவர்களால் உருவாக்கப்பட்டது.
கொடியில் புத்தரைச் சுற்றி பிரகாசித்த ஒளிக்கதிர்களின் வர்ணங் களான நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, செம்மஞ்சள் என்ப வற்றுடன் இவ்வர்ணங்களின் கலவையும் கொண்டு விளங்கு கின்றது.