இலங்கையின் தேசிய மரம்
இலங்கையின் தேசிய மரம் எது?
நாகமரம்
விஞ்ஞானப் பெயர் மெசுவா நாகசூரியம் (Mesua nagassarium)
ஆங்கிலத்தில் இதன் பெயர் Ceylon Ironwood என அழைக்கப்படுகின்றது.
இலங்கையின் தேசிய மரமாக நாகமரம் அறிவிக்கப்பட்டது எப்பொழுது? 1986 பிப்ரவரி 26
நாக மரத்தை தேசிய மரமாக தேர்வு செய்ய காரணம் என்ன?
நாக மரத்தை தேசிய மரமாக தேர்வு செய்ய ஏழு காரணங்கள் உள்ளது..
- இது இலங்கையில் உருவாகிய ஒரு மரம்
- அதன் உறுதித்தன்மை மற்றும் பயன்பாடு
- இலங்கை வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன் தொடர்பு
- மரத்தின் வெளிப்புற தோரணை
- பரந்து விரிந்து காணப்படுதல்
- நிறம் மற்றும் அதன் இயல்புகள்
- நாக மரத்தை எளிதாக வரைவதற்கான திறன்
நாக மரத்தை பற்றிய பொது தகவல்கள்
நாகமரம் (Mesua ferrea) எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் பூக்கள் மிகவும் நறுமணமிக்கதாக இருக்கும்.
- மிக வலிமையான பலகை என்பவற்றிற்கான இந்த மரம் பயிரிடப்படுகின்றது.
- இலங்கையில் 96 எக்டேர் (237 ஏக்கர்) பரப்பு கொண்ட தேசிய நாகமர காடு உள்ளது.
- இது 8 நூற்றாண்டில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த நான்காம் தப்புல மன்னனால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்படுகின்றது.
- மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான காடுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
- நாகமரம் புன்னை மர இனத்தை சார்ந்தது.
- நாகமரம் 100 அடி உயரம் வரை வளரும்.
- இத்தாவரத்தின் அடிப்பகுதி 2 மீட்டர் விட்டம் வரை வளர்வதுண்டு.
- இத்தாவரம் இலங்கையின் ஈரவலய பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரமான மலைப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
- நாக மரத்தின் இலைகள் 7 தொடக்கம் 15 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியனவாக உள்ளது.
- நாக மரத்தின் இலைகளின் கீழ்ப்புறம் சற்று வெள்ளையாக இருக்கும்; இதன் இளந்தளிர்கள் சென் நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த ஊதா நிறம் வரையிலும் இருப்பதுடன் இளம் தளிர் இலைகள் கீழ்நோக்கி வளைந்திருக்கும்.
- நாக மரத்தின் பூக்கள் 7 தொடக்கம் 5 சென்டிமீட்டர் வரையான விட்டம் உடையது.
- நாக மரத்தின் பூக்களின் நிறம் வெள்ளை
- பூக்களில் நான்கு இதழ்களுக்கு நடுவில் மஞ்சள் நிறமான மகரந்தம் காணப்படும்.
- நாகமரம் இலங்கையைத் தாயகமாகக் கொண்டிருந்தாலும் இந்தியாவின் அசாம் மாநிலம், நேபாளம், இந்தோசீனா, மலாய் தீபகற்பம் போன்ற
- இடங்களிலும் பயிரிடப்படுகின்றது.
- நாக மரத்தின் பயன்பாடுகள்
- ஆலய கட்டுமான பணிகள், சிற்பக் கலைகள், மற்றும் உறுதியான தளபாட தேவைகளுக்காக பலகை பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அல்லது மரமாக பயன்படுத்தப்படுகின்றது.
- நாக மரத்தின் பலகைகள் மிகவும் உறுதியானது, பாரம் அதிகமாக இருக்கும். நாகமரம் ஒரு கன அடி 72 இராத்தல் நிறையுடையது.
- நாக மரப்பலகை கடுமையான செந்நிறத்தில் காணப்படும். நாக மரமானது நீடித்து உழைக்கக்கூடிய பலகை வகையைச் சார்ந்தது.
- இதன் பலகைகள் ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் உறுதிமிக்க பலகை தேவைப்பாடு களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
- நாக மரத்தின் பிசின் ஓரளவு நச்சுத்தன்மை வாய்ந்தது.
- நாக மரத்தின் பல்வேறு பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
- நாகமர வித்துக்களிலிருந்து ஆயுர்வேத எண்ணைகள் தயாரிக்கப்படுகின்றது.