ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
இன்று உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படும் ஒரு பிரச்சினை ஞாபக மறதி அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை. எமது ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள சில வழிகள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
எமது அன்றாட செயற்பாடுகளை மீட்டிப் பார்த்தல்.
ஒரு குழந்தையிடம் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள இச்செயற்பாடு மேற்கொள்ளப்படும். அதாவது ஒரு குழந்தையிடம் அவர்களது பெற்றோர் "காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நீ என்ன செய்தாய்?" என வினவுதல்.
இவ்வாறு குழந்தையிடம் பெற்றோர்கள் விளையாட்டுத்தனமாக கேட்கும்போது அவர்கள் "நான் என்ன செய்தேன்?" என யோசிக்க ஆரம்பிப்பார்கள். இதன் காரணமாக அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ளல்.
விஞ்ஞானரீதியான ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்ட ஒரு விடயம் சில உணவுகள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன என்பதாகும். அவ்வாறான உணவுகளை நாம் உட்கொள்ளும் போது எமது ஞாபக சக்தி அதிகரிக்கும்.
அவ்வாறான உணவுகளாக நாம் மீன் முட்டை பூசணி விதை பால் கடலை மற்றும் தோடம்பழம் போன்ற பல உணவுகளை கூறமுடியும்.
பரீட்சையில் புள்ளி எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.
நாம் ஒவ்வொருவரும் பரிட்சையில் புள்ளி எடுப்பதற்கு மாத்திரமே ஒரு விடயம் குறித்து படிக்கின்றோம். பரிட்சை எழுதி முடித்த பிறகு நான் படித்த பாடம் தொடர்பில் எமக்கு கவனம் இருக்காது எனவே அவ்விடயத்தை மறந்து விடுவோம்.
சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் பரிட்சையில் புள்ளி எடுப்பதற்கும் மாத்திரம் படிக்காது பாடத்தை விரும்பி படிப்பதன் ஊடாக அவ்விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்.
யோசிக்கும் திறனை அதிகரித்துக் கொள்ளல்.
நாம் ஒரு விடயம் குறித்து அல்லது ஏற்கனவே படித்த விடயம் குறித்து யோசிக்க வேண்டும். அவ்வாறு நாம் யோசிக்கும்போது அவ்விடயம் எமக்கு ஞாபகத்திற்கு வரும். இதனால் எமது ஞாபகசக்தி அதிகரிக்கும்.
எமது வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.