பஞ்சகருவிகளில் ஒன்றான கடலலை அரிப்பு.
கடலலை அரிப்பு என்பது கடல் நீரானது கரையோரத்தை தாக்கி பலவகையான நில உருவங்களை உருவாக்குவது ஆகும். கரையோரப் பிரதேசத்தில் பல வகையான நிலவுருவங்கள் காணப்பட இக் கடலலை அரிப்பு காரணமாகிறது.
கடற்கரைப் பிரதேசங்களை பின்வருமாறு வகைப்படுத்துவார்கள்.
- மேலெழுந்த கடற்கரை.
- அமிழ்ந்த கடற்கரை.
- கலப்பு கடற்கரை.
- நடுநிலை கடற்கரை.
கடற்கரையை கிரகர் பின்வருமாறு தனது கொள்கை அடிப்படையில் வகைப்படுத்தி உள்ளார்.
- ஒத்த கடற்கரை.
- ஒவ்வாத கடற்கரை.
- கலப்பு கடற்கரை.
கடலலை அரிப்பு தொடர்பில் பின்வரும் விடயங்கள் கவனம் செலுத்தப்படும்.
- கரையோர நிலவுருவங்களை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் எவை?
- கடலலை அரிப்பின் தொழில்கள் எவை?
- கடலலை அரிப்பால் உருவாகும் நிலவுருவங்கள் எவை?
கரையோர நிலவுருவங்களை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் எவை?
- நீரியல் தாக்கம்.
- அலை.
- இரசாயனத் தாக்கம். (கரைசல்)
- கடலலையால் கொண்டுவரப்படும் பருப்பொருட்கள்.
- வற்றுப் பெருக்கு.
- நீரோட்டங்கள்.
நீரியல் தாக்கம்:- கடற்கரை பிரதேசத்தில் உள்ள பாறைப்படைகளில் பல்வேறு விதமான துவாரங்கள் காணப்படும். அத் துவாரங்களில் வளி நிரம்பி காணப்படும் போது வேகமாக கடலலை தாக்கும். அச் சந்தர்ப்பத்தில் அமுக்கம் ஒன்று பிரயோகிக்கப்பட்டு பாறை சிதைவுக்குள்ளாவதையே நீரியல் தாக்கம் என்பர். இது கரையோர நிலவுருவங்கள் உருவாக காரணமாக அமையும்.
அலை:-கரையோர நிலவுருவங்கள் உருவாக அதிகம் செல்வாக்கு செலுத்தும் காரணி அலை ஆகும். அலை மூன்று வகைப்படும். அவையாவன:-
- ஆக்கும் அலை.
- அழிக்கும் அலை.
- மீள்கழுவும் அலை.
மேற்குறிப்பிட்ட அலைகள் தொடர்ச்சியாக கரையோரத்தை அரிக்கும் போது நிலவுருவங்கள் பல உருவாகின்றன.
இரசாயனத் தாக்கம்:-கரையோரத்தில் உள்ள பாறைகள் கடலில் உள்ள உப்பு நீருடன் சேர்ந்து இரசாயன தாக்கத்திற்கு உட்படுகின்றன. இதனால் பாறைகள் சிதைக்கப்பட்டு நிலவுருவங்கள் உருவாகின்றன.
கடல் அலையால் கொண்டுவரப்படும் பருப்பொருட்கள்:-நதியால் கொண்டுவரப்படுகின்ற பலவகையான பருப்பொருட்கள் மற்றும் கடலில் உள்ள பருப்பொருட்கள் போன்றவை கடலலை செயற்பாட்டால் கடலில் சில இடங்களில் படியவிடப்படுகின்றன. இதனால் நிலவுருவங்கள் உருவாகின்றன.
கரையோர நிலவுருவங்களை உருவாக்குவதிலும் செல்வாக்கு செலுத்தும் ஏனைய காரணிகள் சில பின்வருமாறு,
- பாறைகளின் வன்,மென் தன்மை.
- அலையின் வேகம்.
- தாவரப் போர்வைகள்.
- மானிடச்செயற்பாடுகள். (உ+ம்:-போட் சிட்டி)
கடலலை அரிப்பின் தொழில்கள் எவை?
கடலலை அரிப்பின் பிரதான தொழில்களாக பின்வருவன உள்ளன.
- அரித்தல்.
- கொண்டு செல்லல்.
- படிய விடல்.
மேலும் சில அரித்தல் செயற்பாடுகள் கீழ்வருமாறு,
- தேய்தல்.
- அறைந்து தேய்தல்.
- உடைத்தல்.
- மினுக்குதல்.
அரித்தல்:-அரித்தல் செயற்பாடு எனும்போது அலை ,நீரியல் தாக்கம் மற்றும் இரசாயனத் தாக்கம் போன்ற காரணிகளால் கடல் நிலப்பரப்பு அரித்தலுக்கு உட்படுவதை குறிக்கும்.
கொண்டு செல்லல்:-அழிக்கும் அலை, ஆக்கும் அலை மற்றும் மீள் கழுவும் அலை ஆகியவை கடல், நதிநீர் கொண்டு வரும் பருப்பொருட்களை கடற்கரையோரத்திற்கும் , கடலின் ஆழத்திற்கும் கொண்டு செல்வதை குறிப்பதே "கொண்டு செல்லல்" எனப்படும்.
படிய விடல்:-கடல் அலை அரிக்கக்கூடிய பொருட்களையும் ,நதிநீர் கொண்டுவரக்கூடிய பொருட்களையும் கரையோரத்திலோ அல்லது கடற்பரப்பில் படியவிடுவதே" படியவிடல்" எனப்படும்.
உ+ம்:-மணல்,சிப்பி,கற்கள்.
கடலலை அரிப்பால் உருவாகும் நிலவுருவங்கள் எவை?
கடலலை அரிப்பால் கடல் பிரதேசத்தில் அரித்தல் நிலவுருவங்கள் மற்றும் படிதல் நிலவுருவங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
இவற்றுள் அரித்தல் நிலவுருவங்கள் பின்வருமாறு:-- அலை வெட்டிய மேடை.
- ஓங்கல்.
- கற்குகை.
- வில்வளைவு.
- ஊதுதுளை.
- குடா.
- முனை.
- குவடு.
படிதல் நிலவுருவங்கள் பின்வருமாறு:-- மணல் கடற்கரை.
- தொம்பலோ.
- தீவுகள்.
- மணல் படிவுகள் மேடு.
- கூழாங்கண்ணாக்கு.
- வளைந்த கூழாங்கண்ணாக்கு.
- தடுப்பு கடற்கரை.
எனவே மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே பஞ்சக்கருவிகளில் ஒன்றான கடலலை அரிப்பின் பிரதான செயற்பாடுகள் காணப்படுகின்றன.
- அலை வெட்டிய மேடை.
- ஓங்கல்.
- கற்குகை.
- வில்வளைவு.
- ஊதுதுளை.
- குடா.
- முனை.
- குவடு.
படிதல் நிலவுருவங்கள் பின்வருமாறு:-
- மணல் கடற்கரை.
- தொம்பலோ.
- தீவுகள்.
- மணல் படிவுகள் மேடு.
- கூழாங்கண்ணாக்கு.
- வளைந்த கூழாங்கண்ணாக்கு.
- தடுப்பு கடற்கரை.
கடலலை அரிப்பின் அரித்தல் நிலவுருவங்கள் பற்றி விளக்குவது எப்படி?
அலை வெட்டிய மேடை.
கடலின் புறத்தளத்தில் கடலலையானது அரித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் போது அப் பகுதி சமதரையாக காணப்படும்.அதனையே அலை வெட்டிய மேடை என்பர்.
ஓங்கல்.
கரையோரத்தை கடல் அலையானது அரித்தலுக்கு உட்படுத்தி கடலலை மேவி இரங்கக் கூடிய வகையில் கரையோரம் இசைவாக்கம் பெற்று காணப்படுவதையே "ஓங்கல்" என்பர்.இது அமைப்பிற்கு ஏற்ப பல்வேறு வகையாக கூறுவது உண்டு.
- உற்குடைவு ஓங்கல்.
- சாய்வு ஓங்கல்.
கற்குகை.
கடலலை மேவி இரங்க கூடிய ஓங்கல் பிரதேசத்தில் காணப்படக்கூடிய சிறிய துவாரம் ஒன்றில் கடலலையானது அரித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும். காலப்போக்கில் இது கடலுக்கடியில் பல kmக்கு மறைமுகமாக காணப்படும் கற்குகையாக மாறும்.அதனையே "கற்குகை"என்பர்.
வில்வளைவு.
கரையோரப் பிரதேசத்தில் உள்ள பாறைகளில் அரித்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் குகைகள் உருவாகின்றன. இவ்வாறு இரண்டு குகைகள் எதிர்எதிராக வளர்ச்சி அடைந்த உடன் அவற்றில் வளைந்த வாய் பகுதியே "வில்வளைவு" எனப்படும்.
ஊதுதுளை.
கடற்பிரதேசத்தில் உள்ள குகைகளில் கடல் நீர் சென்று நிலைக்குத்தாக காணப்படும் வன்மையான பாறைகளை விட்டுவிட்டு மென்மையான பாறைகளை அரித்தலுக்கு உட்படுத்தும்.இதன் போது நீண்ட துவாரம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதனூடாக நீர் விசிறிக் கொண்டு பாய்வதையே "ஊதுதுளை"என்பர்.
குடா.
கடற்கரை பிரதேசத்தில் நிலம் அரித்தலுக்கு உட்பட்டு மூன்று புறம் நிலத்தாலும் ஒரு புறம் நீராலும் சூழப்பட்ட பகுதி "குடா"எனப்படும்.
முனை.
கடற்கரை பிரதேசத்தில் நிலம் அரித்தலுக்கு உட்பட்டு மூன்று புறம் நீராலும் ஒரு புறம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதி "முனை"எனப்படும்.
கடலலை அரிப்பின் படிதல் நிலவுருவங்கள் பற்றி விளக்குவது எப்படி?
மணல் கடற்கரை.
கடற்கரை பிரதேசத்தில் அலையானது கொண்டுவரக் கூடிய மணல் படிவுகளை கரையோரங்களில் படியவிட்டு செல்வதால் "மணல் கடற்கரை" உருவாகின்றது.
தொம்பலோ.
கடல் பிரதேசத்தில் கடலலை கொண்டுவரக் கூடிய பருப்பொருட்களை கரையோரத்திற்கும் கடலில் உள்ள நில திணிவிற்கும் இடையில் படிய விட்டுச் செல்வதால் உருவாகும் நிலவுருவமே "தொம்பலோ"எனப்படும்.
தீவுகள்.
கடலலையால் கொண்டுவரக்கூடிய பருப்பொருட்களை கடல் பகுதியில் படிய விடுவதால் "தீவுகள்" உருவாகின்றன. இவை நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு நிலவுருவமாகும்.
மணல் படிவுகள் மேடு.
கடலலையால் கொண்டு வரப்படுகின்ற மணற்படிவுகளை கடற்கரைப் பகுதியில் குவியல் குவியலாக படியவிட்டு செல்வதையே "மணல் படிவுகள் மேடு" என்பர்.
கூழாங்கண்ணாக்கு.
கடலலையால் கொண்டுவரப்படும் பருப்பொருட்களை கடற்கரை பிரதேசத்தில் இருந்து கடலை நோக்கி நாக்கு வடிவில் படிய விட்டு செல்வதையே "கூழாங்கண்ணாக்கு" என்பர்.
இவ்வாறு படியவிடப்பட்டவை வளைத்துக் காணப்படுமாயின் "வளைந்த கூழாங்கண்ணாக்கு" என்பர்.
தடுப்பு கடற்கரை.
கடற்கரை பிரதேசத்தில் உள்ள குடாக்களின் மத்திய பகுதியில் கடலலை பருப்பொருள்களை படியவிடும் போது குடா நிலவுருவத்தினுள் கடலலை அல்லது கடல் நீர் வரமுடியால் தடுக்கப்படுவதையே " தடுப்பு கடற்கரை" என்பர்.
எனவே மேற்கூறிய அடிப்படையிலேயே பஞ்ச கருவிகளில் ஒன்றான கடலலை அரிப்பின் நிலவுருவங்கள் உள்ளன.