நவீன கால உலக அதிசயங்கள்
பெர்னார்ட வெப்பர் என்பவரால் நிறுவப்பட்ட New Seven Wonders Society எனும் சுவிட்சர்லாந்து அமைப்பு சர்வதேச வாக்கெடுப்பை 2007இல் நடாத்தியதன் மூலம் நவீன கால உலக அதிசயங்கள் தெரிவு செய்யப்பட்டன.
பிரமிட் (சி சென் இட்ஸா) :
மாயன் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்
மெக்ஸிக்கோ நாட்டில் உள்ள பிரமிட் இதுவாகும்.
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
சீனப் பெருஞ்சுவர்:
சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கிழக்கு ஷங்காய் கணவாய் முதல் மேற்கே லோப்னர் வரை 6350கி.மீ நீளத்தில் கட்டப்பட்டதாகும்.
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
தாஜ்மகால்:
டெல்லியை அடுத்து ஆக்ராவின் ஜமுனை நதிக் கரையில் மொகாலாய மன்னர் ஷாஜகானால் தன் காதல் மனைவியான மும்தாஜுக்கு கட்டிய பளிங்கு மாளிகை.
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
மாச்சு பிச்சு:
இதன் பொருள் மலையுச்சியில் அதிசய நகரம் என்பதாகும். பெருநாட்டில் உருபாம்பா சமவெளியின் உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 2350கி.மீ உயரத்தில் அமைந்துள்ள இந்நகரம் 1911 இல் அமெரிக்க புதை பொருள் ஆய்வாளர் ஹிரம் பிங்காம் என்பவரே The Last City of in Cos எனும் இந் நகரை உலகிற்கு அடையாளம் காட்டினார்.
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
இரட்சகன் யேசு:
பிரேசில் நாட்டின் றியோ டி ஜெனிரோ நகரில் உள்ளது. டிஜ்ஜிக தேசியப் பூங்காவில் கோர்வோடோ மலையுச்சியில் உள்ள இச்சிலை 38மீ உயரமும் 700 தொன் எடையும் உள்ளது. இது ஹெய்ட்டர் சில்வா தலைமையில் உருவாக்கப்பட்டு 1932 இல் திறந்து வைக்கப்பட்டது.
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
ரோமின் கொலாஸியம்:
புராதன ரோமாபுரி நகரத்தின் பொது அரங்கம் இது. இத்தாலியின் தலைநகர் ரோம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்தவர் வெஸ்மாஸியன் சக்கரவர்த்தி.
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
பெட்ரா:
ஜோர்தான் நாட்டின் சாக்கடலுக்கு அருகேயுள்ள மலைத் தொடரில் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒரு மாளிகை. இங்கே கோவில்கள். வளைவுகள். கோபுரங்கள் என 800 ற்கும் அதிகமான நினைவிடங்கள் உள்ளன. இது 1812 இல் ஜொஹான் லுட் விக் பார்க் எனும் சுவிற்சலாந்துக்காரரால் கண்டறியப்பட்டது.
#உலக அதிசயங்கள்
முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
எமது வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
👇👇👇👍👍👍