மறக்காமல் படிப்பது எப்படி?
இன்று உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது சிறுவர்கள், மாணவர்கள்,பட்டதாரிகள் மற்றும் வேலை துறைகளில் உள்ளவர்கள் போன்ற பலருக்கும் உள்ள பிரச்சினைதான் மறக்கும் தன்மை.
குறிப்பாக இன்று படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும் பாடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது சற்று கடினமாக உள்ளது. நாம் சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளலாம்.
அந்தவகையில் பின்வரும் வழிமுறைகள் மறக்காமல் ஒரு விடயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
- படிப்பதற்கு உகந்த இடத்தை தெரிவு செய்தல்.
- படிக்கக் கூடிய பாடங்களை விரும்பிப் படித்தல்.
- படிக்கும்போது சிறிய இடைவேளை ஒன்றைப் பெறல்.
- பாடத்தை புரிந்து கொள்ளல்.
- படித்த பாடங்களை வாழ்வுடன் இணைத்துக் கொள்ளல்.
- படித்த விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தல்.
- முக்கியமானது விடயங்களை குறிப்பெடுத்தல்.
- படித்த பாடங்களில் கேள்விகள் எடுத்து விடை எழுதுதல்.
- புரியாத விடயங்களை மீண்டும் படித்தல்.
- படித்த விடயங்களை இலகுவாக மீட்டிப் பார்த்தல்.
படிப்பதற்கு உகந்த இடத்தை தெரிவு செய்தல்.
ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான இடங்களை தெரிவு செய்து அவ் இடங்களில் அமர்ந்து படிக்கும் போது படிப்பதற்கு இலகுவாக அமையும். ஏனெனில் ஒருசிலர் சமையலறையில் படிப்பார்கள், ஒருசிலர் தூங்கும் இடத்தில் படிப்பார்கள்.
இவ்வாறு தனக்கு பிடித்த அல்லது உகந்த இடத்தை தெரிவு செய்து படிக்கும்போது எமது மறக்கும் திறன் குறையும்.
படிக்கக் கூடிய பாடங்களை விரும்பிப் படித்தல்.
நாம் படிக்கும் பாடங்களை விருப்பத்துடன் படிக்க வேண்டும். நாம் விருப்பமின்றி படிக்கும்போது எமக்கு ஞாபகத்தில் இருக்காது. விரைவாக நாம் படித்த விடயங்கள் மறந்துவிடுவோம். எனவே நாம் படிக்கும் பாடத்தை விருப்பத்துடன் படித்தால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம் மற்றும் மறதி திறன் குறைவடையும்.
படிக்கும்போது சிறிய இடைவேளை ஒன்றைப் பெறல்.
ஒருவர் தொடர்ச்சியாக படிக்கும்போது அவ்விடயம் சில வேளைகளில் மறக்கப்படலாம்.இவ்வாறான சூழ்நிலை காரணமாகவே பாடசாலைகளில் ஒரு பாடவேளைக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கி உள்ளனர்.
எனவே 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை ஒன்று பெற்றுக்கொண்டு மீண்டும் படிக்கும்போது எமது ஞாபகசக்தி அதிகரிக்கும். மேலும் நாம் படிக்கும் விடயங்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.
பாடத்தை புரிந்து கொள்ளல்.
நாம் படிப்பதற்கு முன்பு நாம் படிக்க எடுத்த விடயம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.அதாவது படிக்கும் பாடத்தை வாசித்து மனனம் செய்யாமல் அப்பாடத்தில் எதைப்பற்றி கூறியுள்ளனர் என்பது பற்றிய முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
நாம் படிக்கும் பாடங்களை இரண்டு முறைகளில் புரிந்துக் கொள்ளலாம். அவையாவன:-
- Facts :- நாம் படிக்கும் பாடங்களில் சில விடயங்கள் மனனம் செய்ய வேண்டியவையாக காணப்படலாம். அவற்றை நாம் குறியீடாகவும் ,வரைபடமாகவும் மனனம் செய்து கொள்ளலாம்.
- Concepts:- மனனம் செய்யாமல் நாம் புரிந்து படிக்க வேண்டிய விடயங்களும் உண்டு. அவற்றை புரிந்து படிக்கும் போது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்.
படித்த பாடங்களை வாழ்வுடன் இணைத்துக் கொள்ளல்.
நாம் படிக்கும் பாடங்களை வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அதாவது விஞ்ஞானப் பாடம் படிக்கும்போது அவை எமது சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ரீதியாக கற்பிக்கப்பட கூடியது எனவே அதனை நாம் வாழ்க்கையுடன் இணைத்து கொள்ள வேண்டும்.
மேலும் புவியியல் பாடம் என்பது நாம் வாழக்கூடிய பூமி பற்றிய அம்சங்களைக் கொண்டிருக்கும். எனவே எம்மைச் சுற்றி உள்ள விடயங்கள் பற்றியே புவியியல் பாடம் அமைந்து காணப்படும்.
மேலும் நாம் ஒவ்வொரு விடயத்தையும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி கற்கும் போது அவை எமக்கு எப்பொழுதும் மறப்பதில்லை.
படித்த விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தல்
நாம் மேற் கூறப்பட்ட வகையில் படித்த பாடங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் எமது நண்பர்களுக்கு விளங்கப் படுத்தும்போது அவர்கள் இலகுவாக புரிந்து கொண்டால் நாம் படித்த விடயம் எமக்கு நன்றாக புரிந்துள்ளது என அர்த்தம்.
ஆனால் நாம் கூறும் விடயம் நண்பருக்கு சரியாக விளங்கவில்லை என்றால் நாம் படித்த பாடத்தை மீண்டும் ஒரு முறை நிதானமாக படிக்க வேண்டும் இதன் மூலம் நம் மறக்கும் தன்மை குறைவடையும்.
முக்கியமானது விடயங்களை குறிப்பெடுத்தல்
நாம் படிக்கும் பாடங்களில் முக்கியமான விடயங்களை மட்டும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு தாளில் குறிப்பெடுக்கலாம் அல்லது படிக்கும் புத்தகத்தில் முக்கியமான விடயங்களை மட்டும் ஒரு பேனாவினால் கோடிட்டு வைத்துக்கொள்ள முடியும்.
அவ்வாறு நாம் செய்தால் மீண்டும் அப் பாடத்தை படிக்கும்போது ஏற்கனவே படித்த ஞாபகங்கள் எமக்கு வரும். எனவே எமக்கு மறதி திறன் குறைவடையும்.
படித்த பாடங்களில் கேள்விகள் எடுத்து விடை எழுதுதல்.
நாம் படிக்கக் கூடிய ஒவ்வொரு படங்களிலும் எவ்வாறான கேள்விகள் வரும் என கணிப்பிட வேண்டும். அவ்வாறான கேள்விகளை நாம் எடுத்து விடை எழுதி பழகுதல் வேண்டும்.
இவ்வாறு நாம் படிக்கக்கூடிய ஒவ்வொரு பாடத்திலும் கேள்விக்கு பதில் என செய்து வைத்திருந்தோம் என்றால் எமக்கு பரீட்சையின் போது இலகுவாக அமையும் என்பதுடன் ஞாபகசக்தியும் சற்று அதிகரிக்கும்.
புரியாத விடயங்களை மீண்டும் படித்தல்
நாம் படித்து முடித்த பாடங்களில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் போது அல்லது புரியாமல் காணப்படும்போது பாடங்களை மீண்டும் ஒருமுறை நிதானமாக படிக்க வேண்டும்.
நாம் ஒரு பாடத்தை ஒரு முறை படிப்பதைவிட பல முறை படிக்கும் போது எமது மறதி தன்மை குறைவடையும்.
படித்த விடயங்களை இலகுவாக மீட்டிப் பார்த்தல்.
நாம் படித்த விடயங்களை நண்பர்களுடனோ அல்லது எமக்கு நாமே இலகுவான முறையில் கூறிக்கொள்ள வேண்டும். அதாவது எமக்கு தெரிந்த இலகு தமிழில் ஒரு பாடத்தை சுருக்கமாக மீட்டிப் பார்க்க வேண்டும்.
அவ்வாறு சுருக்கமாக நாம் மீட்டிப் பார்க்கும் போது எமது மூளை அதனை இலகுவாக சேமித்து வைத்திருக்கும். எனவே நாம் சிறிது காலம் சென்று அப்படத்தை புரட்டிப் பார்த்தாலும் அவ்விடயம் எமக்கு ஞாபகத்தில் இருக்கும். இச் செயற்பாட்டால் எமது மறதி தன்மைகள் குறைவடையும்.
எனவே மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்தையும் நீங்கள் மேற்கொள்ளும்போது உங்களின் மறதி தன்மையை குறை வதை நீங்களே அறிவீர்கள். இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
எமது வலைத்தளத்தை பார்வையிட்டது நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.