பாறை என்றால் என்ன?/What is a rock?
கனிமங்களின் சேர்க்கையால் உருவான திண்மமான ஒரு சடப்பொருள் "பாறை" என சுருக்கமாக கூறலாம். புவியின் உள்ளக மற்றும் வெளியக பகுதிகளிலும் பல கனிமங்களால் ஆன பாறைகள் காணப்படுகின்றன. மேலும் சேதனப் பொருட்கள் உருமாற்றம் பெறுவதால் பாறைகள் உருவாகின்றன.
பாறைகள் அது கொண்டுள்ள கனிமங்கள், காலங்கள், அதன் பண்புகள் மற்றும் அதன் தோற்றம் என்பவற்றுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றை பின்வருமாறு கூறலாம்.
- கனிமங்கள் அடிப்படையிலான பாறை.
- புவிச்சரிதவியல் அடிப்படையிலான பாறை.
- வன், மென் அடிப்படையிலான பாறை.
- பிறப்பு தோற்ற அடிப்படையிலான பாறை.
கனிமங்கள் அடிப்படையிலான பாறை
கனிமங்கள் அடிப்படையிலான பாறை எனும் போது புவியில் உள்ள பல்வேறு விதமான கனிமங்களால் உருவானவை என்று கூற முடியும். உலகில்பல்வேறு விதமான கனிமங்கள் உள்ளன உதாரணமாக:- அலுமினியம், மக்னீசியம், இரும்பு ,காரியம் மற்றும் இரத்தினக்கல் போன்றவற்றைக் கூறலாம். இதன் அடிப்படையில் பாறைகள் உருவாகின்றன.
புவிச்சரிதவியல் அடிப்படையிலான பாறை
புவிச்சரிதவியல் அடிப்படையிலான பாறையெனும் போது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப உருவாக்கம் பெற்ற பாறைகளை அக்காலத்தில் பெயரை குறிப்பிட்டு கூறப்படும்.
- மயோசின் கால பாறை.
- பஞ்சியாக்கால பாறை.
வன், மென் அடிப்படையிலான பாறை
உலகில் திடமான வன் பாறைகளும் திடமற்றம் மென்மையான பாறைகளும் உள்ளன. அவற்றையே வன், மென் அடிப்படையிலான பாறைகள் என குறிப்பிடுவர்.
- வன் பாறை:- கருங்கல்
- மென் பாறை:- சுண்ணாம்புக்கல்
பிறப்பு தோற்ற அடிப்படையிலான பாறை
புவியில் பாறை எவ்வாறு தோற்றம் பெறுகிறது? என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பாறைகளை வகைப்படுத்தியுள்ளனர். உலகிலும் பாறைகள் பல்வேறு விதமாக வகைப் படுத்தப்பட்டாலும் கூட "பிறப்பு தோற்ற அடிப்படையிலான பாறை" என்ற வகைப்பாடே அறிஞர்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது.
மேலும் இவ்வகைப்பாடே பாறைகளின் உருவாக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுக்கின்றன. பிறப்பு தோற்ற அடிப்படையிலான பாறை பிரதானமாக மூன்று வகைப்படும். அவையாவன:-
- தீப்பாறை.
- அடையற்பாறை.
- உருமாறிய பாறை.
தீப்பாறை
தீப்பாறை என்பது புவியின் கோளவக பகுதியில் உள்ள மக்மா குழம்பானது பூமியின் உட்பகுதியில் உள்ள துவாரங்கள் ஊடாக பூமியின் மேற்பரப்பிற்கு வந்து குளிர்ச்சி அடைவதால் உருவாகின்றன. இரசாயன சேர்க்கை அடிப்படையில் தீப்பாறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன
- அமில தீப்பாறை.
- உப்பு மூல பாறை.
- இடை மூலப்பாறை.
- மிகை உப்பு மூலப்பாறை.
புவியின் உட்பகுதியில் இருந்து வரக்கூடிய மக்மா குழம்பானது புவியை தகர்த்துக்கொண்டு புவி மேற்பரப்பிற்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு புவி மேற்பரப்பிற்கு வர முடியாத சந்தர்ப்பங்களில் பூமியின் உட்பகுதியிலேயே மக்மா குழம்பானது பாறைகளுக்கு இடையில் சென்று குளிர்ச்சி அடைந்து பாறைகளாக மாறுகின்றன.இதன் மூலம் குறிப்பிடுவது என்னவென்றால் தீப்பாறைகள் புவி மேற்பரப்பில் உருவாகின்றன அதேபோன்று பூமியின் உட்பகுதியிலும் உருவாகின்றன என்பது ஆகும்.
இவ்வாறு புவியின் உட்பகுதியிலும், புவியின் வெளிப்பகுதியிலும் உருவாகக்கூடிய பாறைகளுக்கு பின்வரும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை நாம் தீப்பாறைகளின் வகைப்பாடுகள் எனவும் குறிப்பிடுவோம். அவையாவன:-
- தள்ளல் தீப்பாறை.
- தலையீட்டு தீப்பாறை.
தள்ளல் தீப்பாறை என்றால் என்ன?
புவியின் உட்பகுதியில் உள்ள மக்மா குழம்பானதுபூமியின் மேற்பரப்பிற்கு வந்து குளிர்ச்சியடைந்து திண்மமாக மாறுவது தள்ளல் தீப்பாறை எனப்படும். எனவே நாம் புவி மேற்பரப்பில் காணக்கூடிய தீப்பாறைகள் அனைத்தும் தள்ளல் தீப்பாறைகள் என கூறப்படுகின்றன.
தள்ளல் தீப்பாறைகளை நிறத்தின் அடிப்படையில் நாம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன,
- கருப்பு நிறமான பாறை.
- மென் நிறமான பாறை.
- மத்திம நிறமான பாறை.
தலையீட்டு தீப்பாறை என்றால் என்ன?
கோளவக பகுதியில் இருந்து வரக்கூடிய மக்மா குழம்பானது புவி ஓட்டை தகர்த்துக்கொண்டு புவி மேற்பரப்பிற்கு வர முடியாத சந்தர்ப்பங்களில் பூமியின் உட்பகுதியில் உள்ள பாறை இடைவெளிகளில் மக்மாகுழம்பு இறுகி குளிர்ச்சியடந்து பாறைகளாக மாற்றம் அடைகின்றன. இவ்வாறு புவியின் உட்பகுதியில் உருவாகக்கூடிய தீப்பாறைகளை தலையீட்டு தீப்பாறை என குறிப்பிடுவர்.
தலையீட்டு தீப்பாறை புவியின் உட்பகுதியில் உருவாகும் இடங்களைப் பொறுத்து இரண்டு வகைப்படுகின்றன. அவையாவன:-
- பாதாளத் தீப்பாறை.
- கீழ்பாதாள தீப்பாறை.
அடையற்பாறை
தீப்பாறை மற்றும் அடையற்பாறைகள் காற்றால் அரிக்கப்பட்டு அவற்றின் எச்சங்களைை வேறொரு இடத்தில் படிய விடுகின்றன. அப் படிவுகளால் புதிய ஒரு பாறை உருவாகின்றது. இவ்வாறு பல தாய்பாறைகளின் அடையல்களால் உருவானதே அடையற்பாறை எனப்படும்.
அடையற் பறையை பிறப்பு அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
- பொறிமுறையால் உருவான அடையற்பாறை.
- இரசாயன முறையில் உருவான அடையற்பாறை.
- சேதன முறையில் உருவான அடையற்பாறை.
- அசேதன முறையில் உருவான அடையற்பாறை.
உருமாறிய பாறை
- கருங்கல் - நயிஸ்பாறை, பாம்புகல்
- மணற்கல் - குவாட்சைட்
- சுண்ணக்கல் - மார்பில்/சலவைக் கல்