புவியின் கட்டமைப்பு / Structure of the Earthபுவியின் கட்டமைப்பு
புவியின் உள்ளக பகுதியில் உள்ள விடயங்கள் பற்றி அறிந்து கொள்வதே புவியின் கட்டமைப்பு ஆகும்.
புவி மேற்பரப்பில் காணப்படக்கூடிய செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு வளி மண்டலத்தை வகைப்படுத்தி உள்ளார்களோ, அது போலவே புவியின் உள்ளக பகுதியையும் வகைப்படுத்தி உள்ளார்கள்.
புவி கட்டமைப்பின் பிரதானமாக மூன்று படைகளும் எவை?
- ஓடு (புவியோடு)
- மூடி (இடையோடு)
- மையம் (கோளவகம்)
புவி கட்டமைப்பில் புவியோடு
புவி மேற்பரப்பில் உள்ள ஓர் சிறிய படை மற்றும் உயிர்கள் நிலைத்திருப்பிற்கு உதவும் ஓர் படை "புவியோடு" எனலாம். இது 5Km - 60Km வரை பரந்து காணப்படுகிறது.
புவி திணிவில் 1% மாத்திரமே புவியோடு கொண்டுள்ளது. உயிர்கள் நிலைத்திருப்பிற்கு உகந்த மண், பாறை, தாவரங்கள் மற்றும் ஏனைய அம்சங்கள் அனைத்தும் புவியோட்டில் காணப்படுகின்றது.
புவியோட்டில் உள்ள மண் தாவர வளர்ச்சி, விவசாய நடவடிக்கைகள் போன்ற பல மானிட மற்றும் இயற்கை செயற்பாடுகளுக்கு உதவுகின்றது.
மேலும் பவியோட்டில் உள்ள பாறைகள் பல்வேறு கனிய பொருட்களை கொண்டிருப்பதால் பல்வேறு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- வீடு அமைத்தல்.
- பாறைகளால் அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்தல்.
- வலு சக்தியாக பயன்படல். (நிலக்கரி)
- உர உற்பத்திக்கு பயன்படும்.(தொலமைட்)
- ஆபரண உற்பத்திக்கு பயன்படும்.(வைரம்)
- கடலலை அரிப்பிலிருந்து கரையோரத்தை பாதுகாப்பதற்காக கருங்கல் பயன்படுத்தப்படுகின்றது.
புவியோடு இரண்டு படை அமைப்புகளைக் கொண்டது. அவையாவன:-
- 1️⃣கண்ட ஓடு (sial படை)
- 2️⃣சமுத்திர ஓடு (sima படை)
1️⃣கண்ட ஓடு
கண்ட ஓடு சியல் (sial) படை எனவும் அழைக்கப்படும். கண்ட ஓடு சியல் படை என ஆழைக்கப்பட காரணம் சிலிக்கன் (Si) மற்றும் அலுமினியம் (Al) ஆகிய கனியங்களை அதிக அளவு கொண்டிருப்பதால் ஆகும்.
2️⃣சமுத்திர ஓடு
சமுத்திர ஓடு சீமா (sima) படை எனவும் அழைக்கப்படும். சமுத்திர ஓடு சீமா படை என அழைக்கப்பட காரணம் சிலிக்கன் (Si) மற்றும் மெக்னீசியம் (Mg) ஆகிய கண்டங்களை அதிக அளவு கொண்டிருப்பதால் ஆகும்.
சமுத்திரம் ஓட்டின் மேல் கண்ட ஓடு மிதந்து கொண்டிருக்கிறது.
புவியோட்டின் அடர்த்தி ஒரே அளவில் காணப்படுவதில்லை. அதாவது சமுத்திரப் பபகுதியில் 5Km வரையும் கண்ட பகுதியில் 60Km வரையும் பரந்து காணப்படுகின்றது.
புவி கட்டமைப்பில் புவியோடு சிறிய படை என்றாலும் மிகவும் முக்கியமான ஒரு படையாக காணப்படுகின்றது.
புவி கட்டமைப்பில் இடையோடு
புவி ஓட்டிற்கு அடுத்ததாக காணப்படுவது இடையோடு ஆகும். மேலும் புவியோடு மற்றும் கோளகம் ஆகியவற்றுக்கு இடையில் இடையோடு காணப்படுகிறது. இடையோட்டை நாம் மூடி எனவும் அழைக்கலாம்.
புவி ஓட்டில் இருந்து இடையோட்டை பிரிக்கும் எல்லை "மொஹோரோவிசிக் தொடர்ச்சியின்மை" என அழைக்கப்படும்.
புவித் திணிவில் புவியோடு 1% மாத்திரமே கொண்டிருந்தது. எனினும் இடையோடு ஆனது 3/2 பங்கினைக் கொண்டுள்ளது. புவி கட்டமைப்பில் அதிகமான பரப்பு இடையோட்டிற்கு உரித்தானதாகும்.
புவி மேற்பரப்பில் இருந்து 2900Km வரை இடையோடு விரிவடைந்து காணப்படுகிறது.
இடையோடு கொண்டுள்ள இரசாயன சேர்க்கைகள் அடிப்படையில் 2 படை அமைப்புக்களை கொண்டுள்ளது. அவையாவன:-
- 1️⃣மேல் இடையோடு (மேல் மூடி)
- 2️⃣கீழ் இடையோடு (கீழ் மூடி)
மேல் மூடி மற்றும் கீழ் மூடியை பிரிக்கும் எல்லை அஸ்தனோபயஸ் இடைவெளி எனப்படும்.
இப் படையில் அதிகளவில் எரிமலை பாறைக் குழம்பு மற்றும் ஒலிவின் பாறைகளை காணப்படுகின்றன. மேலும் இரும்பு, அலுமினியம், சிலிக்கன், மக்னீசியம் போன்ற கனிமங்களும் காணப்படுகின்றன.
புவி கட்டமைப்பில் கோளவகம்
இடையோட்டிற்கு அடுத்து காணப்படும் படை கோளவகம் ஆகும். இப் படை மையம் எனவும் அழைக்கப்படும்.
புவி மேற்பரப்பில் இருந்து 3470Km வரை பரந்து காணப்படுகிறது.
இடையோட்டில் இருந்து கோளவகத்தைப் பிரிக்கும் எல்லை கூற்றன்பேர்க் இடைவெளி எனப்படும்.
கோளவகம் இரண்டு படை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அவையாவன:-
- 1️⃣உற்கோளவகம்
- 2️⃣வெளி கோளவகம்
உற் கோளவகம் திடமான பாறைப் படைகளால் ஆனது. வெளி கோளவகம் திரவ நிலையில் உள்ள மக்மா குழம்புகளைக் கொண்டுள்ளது.
உற்கோளவகம் மற்றும் வெளி கோளவகத்தைப் பிரிக்கும் எல்லை லெமன் இடைவெளி எனப்படும்.
எமது வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.