உலக நீர் பரம்பல் / World water distribution
ஐதரசன் மூலகம் இரண்டையும் ஒட்சிசன் மூலகம் ஒன்றையும் (H²O) கொண்டது "நீர்"ஆகும். ஓடை , அருவி, நதி, குளம், கடல், கிணறு மற்றும் ஏரி போன்ற இடங்களில் பரவிக் காணப்படுகின்றது. இவ்வாறு பரம்பிக் காணப்படுவதை பொதுவாக நாம் "நீர்க்கோளம்"என அழைக்கின்றோம்.
ஞாயிற்றுத் தொகுதியில் நீர் காணப்படும் ஒரே கோள் புவி ஆகும். புவி அதிக அளவில் நீரால் சூழப்பட்டுள்ளது. அதாவது 71 சதவீதம் நீராலும் , 29 சதவீதம் நிலத்தால் புவி சூழப்பட்டிருக்கிறது. 71% ஆக காணப்படும் நீரின் கொள்ளளவு 1386 மில்லியன் கியூபிக் கிலோமீட்டர் என ஆய்வாளர்களால் கணிப்பிடப்பட்டுள்ளது.
நீரின் நிலைகள் எவை?
உலகில் மூன்று வகையாக நீரின் நிலைகள் காணப்படுகின்றன. அவையாவன:-
- 🥇திண்ம நிலை.
- 🥈திரவ நிலை.
- 🥉வாயு நிலை.
உலகில் நீர் எவ்வாறு பரவிக் காணப்படுகிறது?
உலகின் நீரானது நதி, குளம் ,கடல் போன்ற பல்வேறு விதங்களில் பரவிக் காணப்படுகின்றது. எனினும் இவ்வாறு பல இடங்களில் உள்ள நீர் ஒரே அளவில் காணப்படுவது இல்லை. அது இடத்துக்கு இடம் வேறுபட்டதாக காணப்படுகின்றது.
உலகில் உள்ளநீர் உவர்நீர், நன்னீர் , சவர் நீர் என்ற அடிப்படையில் காணப்படுகின்றது.🖋️உவர் நீர் என்பது மனித பயன்பாட்டுக்கு உகந்ததற்ற உப்பு நீராகும். 🖋️நன்னீர் என்பது மனித பயன்பாட்டுக்கு உகந்த நீராகும். இந்நீரையே நாம் எமது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றோம். 🖋️சவர்நீர் என்பது உவர்நீரும் ,நன்னீரும் கலந்த நீரை குறிப்பிடுவர்.
உலகிலுள்ள 71 சதவீத நீரில் 97.5 % சமுத்திர நீர் ஆகவும், 2.5 % நன்னீர் ஆகவும் பரவிக் காணப்படுகிறது.
2.5% நன்னீரானது புவி மேற்பரப்பில் பரம்பிக் காணப்படும் விதம் பின்வருமாறு:-
- வளிக்கோள நீர் - 0.4%
- உறைப்பனி - 0.8%
- தரைக்கீழ் நீர் - 30.1%
- பனியாறு - 68.7%
இந்த நீர் பரம்பலுக்கான முக்கிய காரணம் 👉"நீரியல் வட்டம்" 👈என கூறலாம்.
நீர் பெறப்படும் மூலங்கள் எவை?
- சமுத்திரம்
- கடல்
- ஆறு
- கால்வாய்
- ஊற்று
- ஏரி
- அருவி
- தரைக்கீழ் நீர்
- கிணற்று நீர்
- பனிக்கட்டி
- மழைவீழ்ச்சி
- வளிமண்டல நீர்
நீரின் பயன்பாடுகள் எவை?
உலகில் நீர் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. "நீரின்றி அமையாது உலகு"என்ற கூற்றுக்கு இணங்க ஒரு உயிரினம் உயிர்வாழ்வது முதல் ஒரு தாவரம் வளர்ச்சி அடைவது வரை மற்றும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் வரை நீர் பயன்படுகின்றது. அவ்வாறு நீர் பயன்படும் விதங்கள் சில கீழே உள்ளன.
- மனிதருக்கு குடிநீராகப் பயன்படுகிறது.
- பூமியின் சமநிலையை பேண உதவும்.
- மனிதனுக்கு உடலியல் தேவைகளுக்கு நீர் பயன்படுகிறது. 👉உதாரணமாக:-குளித்தல்
- வானிலை மற்றும் காலநிலை செயற்பாடுகளுக்கு நீர் அத்தியாவசியமான ஒன்றாகும். 👉உதாரணமாக:-மழைவீழ்ச்சி
- விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் பயன்படும். 👉உதாரணமாக:-தாவரங்களுக்கு நீர் பாய்ச்சல், கிருமிநாசினிகள் கலத்தல்.
- கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு நீர் பயன்படும். 👉உதாரணமாக:-மீன்பிடி கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில்.
- நீர் உணவு களஞ்சியமாக பயன்படுத்தப்படும். 👉 உதாரணமாக மீன் உற்பத்தி
- வீட்டுப் பாவனைக்கு நீர் பயன்படும். 👉உதாரணமாக:-சமைத்தல், வீடு கழுவுதல், பொருட்கள் கழுவுதல், ஆடை கழுவுதல்.
- போக்குவரத்திற்கு பயன்படும். 👉உதாரணமாக:-கப்பல் போக்குவரத்து
- வலு உற்பத்திக்கு பயன்படும். 👉உதாரணமாக:-மின்சார உற்பத்தி
- விளையாட்டு போட்டிகளில் நீர் பயன்படும். 👉உதாரணமாக:- நீச்சல் அடித்தல், அலைச்சறுக்கல் விளையாட்டு
- மண்ணின் வளத்தை அதிகரிக்க உதவும்.
- நீர்ப்பாசனம் தொகுதிகளை அமைக்க உதவும்.
நீர் எவ்வாறு மாசடைகிறது?
இயற்கை காரணிகள்
- 🌀சுனாமி தாக்கம் காரணமாக உவர் நீர் நன்னீருடன் கலந்து நீர் மாசடைகிறது.
- 🌀வெள்ளப்பெருக்கு ஏற்படும் விடத்து கழிவுப் பொருட்கள் நீருடன் கலந்து நீர் மாசடைகிறது.
- 🌀 அமில மழை பொழிதல்.
- 🌀 நீரேந்துப் பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்படல்.
- 🌀எரிமலை வெடிப்பு காரணமாக அவற்றிற்கு அருகில் உள்ள நீர் நிலைகள் மாசடைகின்றன.
மானிட காரணிகள்
- 🌀 கடற்கரையிலுள்ள சுற்றுலா விடுதிகள் மூலம் கடல்நீரில் கழிவுப்பொருட்கள் சேர்க்கப்படுதல்.
- 🌀வீட்டிலிருந்து கழிவுகளை நதி நீரில் கொட்டுதல்.
- 🌀 தொழிற்சாலையில் கைத்தொழில்களுக்காக பயன்படுத்தக் கூடிய நீர் கழிவு நீராக வெளியேற்றப்படுதல்.
- 🌀 தொழிற்சாலைக் கழிவுகளை நதி நீருடன் கலந்து.
- 🌀சாயமூட்டும் கைத்தொழில் ஊடாக வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தம் காரணமாக தரைக்கீழ் நீர் மாசடையும்.
- 🌀விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் உரம்,கிருமி நாசினி மற்றும் ஏனைய இரசாயன பதார்த்தங்கள் நீருடன் கலப்பதால் நீர் மாசடையும்.
- 🌀எண்ணெய் கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவுகளால் கடல்நீர் மாசடைகிறது.
- 🌀நகராக்கத் திட்டங்கள்.
நீர் மாசடைதலை எவ்வாறு தடுக்கலாம்?
உலகில் பல்வேறு காரணங்களால் நீர் மாசடைகிறது. நாம் சில செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் நீர் மாசடைதலைக் தடுக்க முடியும். அவ்வாறான சில வழிகள் கீழே உள்ளன.
- நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களை விழிப்புணர்வூட்டல்.
- நீரேந்துப் பிரதேசங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்த்து கொள்ளல்.
- விவசாய நடவடிக்கைகளின் போது இரசாயன பொருட்களை நீரில் கலக்காதிருத்தல்.
- இயற்கை பாதுகாப்பு திட்டங்களுக்கு ஏற்ப நகராக்க திட்டங்களை மேற்கொள்ளல்.
- வீட்டுக்கழிவுகளை நீரில் இடாமல் முறையாக அகற்றுதல்.
- கரையோர பகுதியில் உள்ள ஹோட்டல்களின் கழிவுகளை கடல்நீருடன் கலக்காமல் முறையாக அகற்றுதல்.
நீர் பாதுகாப்பின் முக்கியத்துவங்கள் எவை?
- நீர் பாதுகாப்பு தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டல்.
- மழைநீர் சேகரிப்பு திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளல்.
- அளவுக்கு அதிகமாக நீரை வீண்விரயம் செய்வதை தவிர்த்து கொள்ளல்.
- நீரை மீள்சூழற்சி செய்து பயன்படுத்தல். அதாவது பயன்படுத்திய நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தல்.
- தரை கீழ் நீரை எடுத்து பயன்படுத்தல். 🚰உதாரணமாக:- கிணறு, குழாய் நீர்
- அதிகமான நீரேந்துப் பிரதேசங்களை உருவாக்குதல். உதாரணமாக:- 🚰 நீர்த்தேக்கங்கள், குளங்கள்