சாரணர் இயக்கம்
சாரணிய வாக்குறுதிகள் மற்றும் நாட்டின் சட்டத்தை மையமாக கொண்ட ஓர் மதிப்புமிக்க அமைப்பு மூலமாக இளைஞர்களின் கல்விக்கு பங்களிப்பு செய்வதும், மக்களின் தனிநபர் சுய ஆளுமையுடன் பங்கு வகிக்கும் சிறந்த உலகத்தை உருவாக்க உதவுகின்றது.
1999 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டர்பனில் நடைபெற்ற முப்பத்தி ஐந்தாவது உலக சாரணியர் மாநாட்டில் இந்த நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலக்கு
2023 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் சிறப்பான, சுறுசுறுப்பான பிரஜைகளாக இருக்க அவர்களின் நாட்டிலும், உலகிலும் எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குதல்.
இலக்கு 2023,
2014ஆம் ஆண்டு ஸ்லோவேனியாவின் லுப்லாஜானாவில் நடைபெற்ற நாற்பதாவது அகில உலக சாரணர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சாரணர் இயக்க ஸ்தாபகர்
சேர். ரபெட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்
Robert Stephenson Smyth Baden-Powell
https://en.wikipedia.org/wiki/Scouting#/media/File:Baden-Powell_ggbain-39190_(cropped).png
ஆரம்பிக்கப்பட்ட நாடு
ஐக்கிய ராஜ்யம்
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1907
பெண்கள் சாரணிய அமைப்பு
ஸ்தாபகர் பேடன் பவல்லின் மனைவியான ஒபேவா பெடன் பவல்
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1910
குருளைச் சாரணர் இயக்கம்
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1916
ரோவர்ஸ் சாரணர் இயக்கம்
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1918
சாரணர் அமைப்பானது ஒரு முறைசாரா கல்வி திட்டமாகும். இத்திட்டத்தின் ஊடாக சிறு வயது தொடக்கம் அதாவது சிறுவர்களின் பாடசாலை வயது தொடக்கம் அவர்களுக்கு உள மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது அவற்றில் முகமிடுதல் நீந்துதல் மலை ஏறுதல், நடைபயணம், தற்பாதுகாப்பு , அனர்த்த முகாமைத்துவம் முதலுதவி என மிக சிறப்பான ஆளுமை மிக்க தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன மேலும் ஜாதி மத மொழி நிற பேதங்கள் அற்ற சமூக பொதுநல சேவைகள் செய்வதற்காக சிறுவயது முதலே பயிற்ற படுகின்றார்கள்.
சாரணர் சீருடை
சாரணர்களுக்கு விசேட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சீருடைகள் உள்ளது. மற்றும் அவர்களின் பயிற்சி நிலைகளுக்கு ஏற்ப தனித்தனி சின்னங்களும் அறிவிக்கப்படுகின்றன. சீருடையுடன் கழுத்துப்பட்டி யும் விசேடமாக சாரணர்களுக்கு உரித்தான ஒரு மாதிரியுடன் இருக்கும் அவர்களுக்கான தொப்பியும் உள்ளது சாரண இயக்கத்தில் சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்கு சாரணர் சீருடையில் செல்வதற்கு அனுமதி உள்ளது.
உலக சாரணர் தினம்.
உலக சாரணர் தினமாக ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் உலகளாவிய சாரணர்கள், சாரணியத்தின் இலச்சினை மற்றும் இலக்கு நோக்கங்கள் போன்றவற்றை நினைவு கூறும் தினமாக அமைகின்றது இந்து சாரணியர் நினைவுதினம் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் தேதி வரை நடைபெற்ற சாரணர் இயக்க பயிற்சிப் பாசறை நடைபெற்ற நாட்களை அடிப்படையாகக் கொண்டு இத் தினம் நினைவு கூறப்படுகின்றது.
1910 காலகட்டத்தில் சாரணர் இயக்கம் உலகளாவிய ரீதியில் பரவத்தொடங்கியது. தற்போது உலகில் 216 நாடுகளில் சாரணர் இயக்கம் நிலைகொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 38 மில்லியன் சாரணர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் சாரணர் இயக்கத்தின் உள்ளனர்.
உண்மையில் இந்த பயிற்சியைப் பெற்றுக் கொள்கின்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டசாலி எனவே கருத வேண்டும். குழுவாக செயல்படுதல், மற்றும் தன்னம்பிக்கை ஆளுமையுடன் கூடிய சிறந்த தலைமைத்துவம் உடைய நபர்களை இந்த சாரணர்பயிற்சி மூலமாக உருவாகிறார்கள்.
இந்தக் கட்டுரை இன்னும் எழுதப்பட உள்ளது...