பெண்களின் பருவம் ஏழு
தமிழ் மொழியில் நம் மூதாதையர்கள் பெண்களின் பருவத்தை வயது அடிப்படையில் பிரித்து அதற்கு பெயர் வைத்துள்ளனர். ஒரு பெண்ணானவரின் உடல் உள வளர்ச்சி ஒவ்வொரு பருவத்திலும் வேறுபட்டதாகவும், பிரித்தறிய கூடியதாகவும் இருக்கின்றது. இங்கே கீழ்காணும் படங்களில் ஒவ்வொரு பருவநிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.
இதோ !
பெண்களின் ஏழு பருவ நிலைகள்.
1. பேதை (5-7)
இந்த நிலையில் இவர்களை சிறுமிகள் என்று பொதுவாக கூறுவர். இந்த பிள்ளைகளுக்கு உள்ளத்தில் ஆண் பெண் பாகு பாடு கிடையாது. உள்ளளவில் இவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் குறுகுறு என ஓடித் தெரிவார்கள்.
2. பெதும்பை (8-11)
இந்த காலகட்டத்தில் ஒரு பெண் பிள்ளை தான் ஒரு பெண் பிள்ளை என தனித்து உணர்ந்து கொள்ளும். பெண்களுக்குரிய இயல்பு மற்றும் குணாதிசயங்கள் தலை காட்டத் தொடங்கும்.
3. மங்கை (12-13)
இந்தக் காலகட்டத்தில் ஒரு பெண் பிள்ளை பெரும்பான்மையாக பூப்பெய்தி விடுவதுண்டு எனவே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தான் ஒரு பெண் எனவும் பெண்ணுக்குரிய இயல்பும் இயல்பாகவே தோன்றிவிடும்.
இக்கால கட்டங்களில் சக ஆண்களிடம் இருந்து சிறிது விலகி இருத்தல் பெண் ஆண் என வித்தியாசத்துடன் செயல்படுதால் போன்றவை தொடங்கி விடும்.
மேலும் பருவநிலை உடைய பெண்கள் உடல் ரீதியான மாற்றத்தை அடைந்து விடுவார்கள்.
4. மடந்தை (14 -19)
பெண்களின் இந்த பருவநிலை ஆங்கிலத்தில் "Teenage" என கூறப்படுகின்றது. இந்தப் பருவ காலத்தில் உடலில் பெரும்பான்மையான மாற்றங்கள் நிகழ்வதுடன் பெண்கள் தன்னை அழகு படுத்திக் கொள்வதற்கும் எதிர்பாலினத்தை கவர்வதற்கும் அதிகம் நாட்டம் செலுத்தும் ஓர் காலகட்டம்.
5. அரிவை (20-25)
இது பெண்களின் திருமணத்திற்கு ஏற்ற வயது மேலும் அவர்கள் இளமையாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும் வயதாகும்.
6. தெரிவை (26-31)
இந்த பருவ நிலையில் பெண்கள் பெரும்பான்மையாக திருமணம் முடித்தவர்களாக இருப்பார்கள்; அல்லது திருமணம் முடிக்கும் நோக்கத்தில் இருப்பார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு குழந்தைகளும் இருக்கக்கூடும்.
7. பேரிளம் பெண் (32-40)
இக்கால கட்டத்தில் ஒரு பெண்ணானவள் மன ரீதியாகவும் உளரீதியாகவும் ஒரு குடும்ப தலைமைத்துவம் உடைய ஒரு சிறந்த தாயாக மாறி இருப்பாள். அவர்களின் உடலமைப்பு முழுமை அடைந்த ஒரு பெண்ணின் உடல் அமைப்பாக இருக்கும்.
இதுவரை காலம் மெழுகு சிலை போல உருவாக்கப்பட்ட பெண்ணுடல் இந்தப் பருவத்தின் பின்னராக உடல் சுருக்கம் விழுதல் வயதாகவதற்கான அறிகுறிகள் தென்படுதல் என்பன தொடங்கி விடும்.
எமது வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.