வியர்வை சுரப்பது ஏன் ?
வியர்வை
நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் ஓர் தகுந்த மட்டத்தில் பேணப்பட இயற்கையாகவே நமது உடலில் நடைபெறும் ஒரு ஒரு குளிர்வித்தல் முறை வியர்வை எனப்படுகின்றது.
நம் உடலில் வியர்வை வெளியேறாவிட்டால் நம் உடலின் வெப்ப நிலை அதிகமாகி பல்வேறுபட்ட நோய்கள் உருவாகும்.
நமது வியர்வையில் 98 சதவீதம் தண்ணீரும், இரண்டு சதவீதம் இதர ரசாயன பொருட்களும் உள்ளன. இந்த ரசாயன பொருட்களில் சோடியம் குளோரைடு அதாவது சாதாரண உப்பு யூரியா சல்பேட்டுகள் கொழுப்பு சத்து நிறைந்த அமிலங்கள் ஆகியவை உள்ளடங்கி உள்ளன.
நமது உடல் முழுவதிலும் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன அவற்றில் நம் உள்ளங்கை அக்குகள் பாதம் ஆகியவற்றில் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன எனவே தான் இது உறுப்புகளில் அதிகமான அளவு வியர்வை சுரக்கின்றது.
நமது உடலில் வியர்வை வெளியேற்றும் என்பது ஒரு முக்கியமானதும் பிரதானமானதுமான ஒரு செயல்பாடாகும். வியர்வை வெளியேறுவதன் மூலமாக நம் உடலில் உள்ள தேவையற்ற அளக்குகள் நீக்கப்படுகின்றது அத்துடன் நமது உடலை ஒரு குறிப்பிட்ட வெப்ப அளவு அளவில் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்கின்றது.
இயந்திரங்கள் இயங்கும் போது வெப்பம் அடைவது போல நம் உடலும் வேகமாக இயங்கும்போது வெப்பமடைகின்றது இவ்வேளையில் நம் வியர்வை அதை கட்டுப்படுத்துகின்றது.
அதுபோல நம் உடலுக்கு வெளியிலும் சூழலில் வெப்பத்தை உடல் தாங்கிக் கொள்வதற்காகவும் அல்லது வெளி வெப்ப நிலையில் உடல் சூடாகும் போது நமக்கு வியர்வை வெளியேறுகின்றது.
மேலும் நம் அதிக உணர்ச்சிவசப்படும் போதும் அல்லது அச்சப்படும் போதும் நமக்கு வியர்வை வெளியேறும்.
உடலின் நன்கு வியர்வை வெளியேற வேலை செய்பவர்கள் அநேகம் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
வியர்வை நாற்றம்.
வியர்வை நாற்றத்திற்கான காரணங்கள் என்ன?
வியர்வை நாற்றத்திற்கான அனேக காரணங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்
நீர் குறைவாக அருந்துதல்,
அதிக எண்ணெய் நெய் சார்ந்த உணவு வகைகள்
துரித உணவு வகைகள் அதிகம் உண்பது
உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளாமை.
மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிதல்
உடுத்திய ஒரு துவைக்காமல் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல்.
உடல் பருமன்
நாள்பட்ட வியாதிகள்
நீரழிவு நோய்
அதிகமான அசைவ உணவு
தினசரி மலம் கழிக்காமல் இருப்பது.
பாக்டீரியா நோய் தொற்றுகள்,
ஏற்கனவே உயர்த்த உடலை கழுவி சுத்தம் செய்யாதிருத்தல்,
என இன்னும் அநேக காரணங்கள் உள்ளன.
வியர்வை நாற்றத்திற்கு தீர்வு
வியர்வை நாற்றத்திற்கு பிரதான ஒரு தீர்வு தேவையான அளவு தண்ணீர் பருகுதல்.
உடலை கழுவி தூய்மையாக வைத்து பேணுதல்.
மேலும் வியர்வை நாற்றத்திற்கு வைத்தியரின் ஆலோசனையின் படி அநேகமான மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் மருத்துவர் ரீதியானவை சந்தையில் உள்ளது பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வியர்வை நாற்றம் என்பது இலகுவில் குணமாக்கிக் கொள்ளக்கூடிய ஓர் குறைபாடு.