நீரியல் வட்டம்
Water cycle in Tamil
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களில் புவி முக்கியமான கோளாகும். இதற்கு பல காரணங்கள் உண்டு.அவற்றுள் ஒன்றே புவியில் நீர் காணப்படல். புவியில் 71 சதவீதம் நீர் பரம்பியுள்ளது.
புவியில் நீரானது கடல், நதி, சமுத்திரம், அருவி, ஓடைகள் மற்றும் கிணறு போன்ற இடங்களில் பரம்பிக் காணப்படுகிறது. இவ்வாறு புவி மேற்பரப்பில் உள்ள நீர் மற்றும் வளிமண்டலம் மற்றும் சூரிய ஒளி போனறவற்றை ஆதாரமாக கொண்டு செயற்படும் வட்டச்செயன்முறையே நீரியல் வட்டம் என சுருக்கமாக கூறலாம்.
நீரானது ஐதரசன் இரண்டையும், ஒட்சிசன் ஒன்றையும் கொண்ட இயற்கை படைப்பாகும்.
நீரியல் வட்டத்தின் செயற்பாடுகள். |
நீரியல் வட்டத்தின் (நீர்ச் சுழற்சி) படிமுறைகள் எவை?
- ஆவியாக்கம்.
- ஆவியுயிர்ப்பு.
- ஒடுங்குதல்.
- பனிப்படுநிலை.
- முகில்கள் உருவாக்கம்.
- படிவுவீழ்ச்சி.
- கழுவு நீரோட்டம்.
ஆவியாக்கம்.
சமுத்திரம்,கடல்,உள்ளூர் கடல், நதி, ஊற்று,அருவி,ஓடை, கிணறு மற்றும் குளங்கள் போன்ற பல நீரேந்துப் பிரதேசங்களில் உள்ள நீரானது சூரிய சக்தியால் நீராவியாக வளிமண்டலத்தைச் சென்றடைவதே "ஆவியாக்கம்" என்பர்.
ஆவியுயிர்ப்பு.
தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் மனித உடலில் இருந்து சூரிய சக்தியால் ஆவியாகி செல்லும் நீராவியே ஆவியுயிர்ப்பு என சுருக்கமாக கூறலாம்.
ஒடுங்குதல்.
ஆவியாக்கம் மற்றும் ஆவியுயிர்ப்பு போன்ற காரணிகளால் ஆவியாக்கப்பட்ட நீரானது வளிமண்டலத்தில் நீராவியாக சேமித்துவைக்கப்படுகிறது.இந்நீராவியானது ஒடுங்கள் என்ற செயற்பாட்டிற்கு உட்படுகிறது.
ஒடுங்கள் என்பது வளிமண்டலத்திலுள்ள நீராவி குளிர்ச்சியடைந்து திண்மமாகவோ அல்லது திரவமாகவோ மாற்றமடைவதைக் குறிக்கும்.
பனிப்படுநிலை/முகில் உருவாக்கம்.
ஒடுங்குதல் செயற்பாட்டின் ஊடாக முகில்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட முகில்களின் நீரானது நீர்த்துளிகளாக சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படக்கூடிய நிலையே "பனிப்படுநிலை" என கூறுவர்.
படிவுவீழ்ச்சி.
நீர்த்துளிகள் கொண்ட முகில்களை திரள் முகில்கள் என அழைப்பர். முகில்களில் நீர் துளியின் அளவு அதிகரிக்கும்போது முகிலின் பாரம் அதிகரிக்கும். இதனால் முகிலில் உள்ள நீர்த்துளிகள் ஆனது புவி மேற்பரப்பை நோக்கி வீழ்த்தப்படுகிறன.
இவ்வாறு வானிலிருந்து விழக்கூடிய நீர் துளிகளை "படிவு வீழ்ச்சி" என குறிப்பிடுவர். படிவு வீழ்ச்சியானது பல்வேறு வடிவங்களில் பூமியை வந்தடைகின்றது. அவையாவன:-
- மழை.
- தூறல் மழை.
- பனிச்சாரல்.
- பனிமழை.
- பனிக்கட்டி.
- மூடுபனி.
கழுவு நீரோட்டம்.
படிவுவீழ்ச்சியின் ஊடாக புவி மேற்பரப்பை வந்தடையும் நீரானது தரை மேற்பரப்பில் மற்றும் தரைக் கீழ் பகுதியில் காணப்படும். தரை மேற்பரப்பில் நதி, அருவி, ஓடை, உள்ளூர் கடல், குளம் போன்ற நீரேந்து பிரதேசங்களில் படிவு வீழ்ச்சியால் கிடைத்த நீரை காணலாம்.
தரையின் கீழ்ப்பகுதி எனும்போது தரை மேற்பரப்பில் உள்ள நீரானது தரையின் ஊடாகப் பொசிந்து நிலத்துக்கு அடியில் சென்று நிலக்கீழ் நீராக படியும். இவ்வாறு காணப்படும் நீர் சமுத்திரத்தை சென்றடைவதையே "கழுவு நீரோட்டம்" என குறிப்பிடுவர்.
எமது வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி. இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.