அஷ்டமா சித்திகள்
நரம்பு மண்டலத்தின் 8 கேந்திரங்களின் மூலமாக மனிதன் எட்டு பெரிய அற்புதச் சக்திகளை அடக்கி ஆளலாம் என்கின்றனர் சித்தர்கள். அவையாவன.
1. அணிமா
உடலின் பாரத்தை அறவே குறைத்து ஒரு நுண்ணணுவின் அளவாக மாறும் சக்தி.
2. மஹிமா
உடல் அளவற்ற பேருருவத்தை அடைதல்.
3.கரிமா
நினைத்த காரியத்தை அடைய எண்ணங்களை மறந்து செயல்படுதல். பளுவற்று உடலைச் சிறகுபோல் ஆக்குதல்.
4. லஹிமா:
5. பிராப்தி|:
கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் உணர்தல்.
6.பிராகாமியம்:
இறவாநிலை அடைதல்.
7. ஈசத்துவம்:
அனைத்துக்கும் தலைமைப் பேறு அடைதல். 8. வசித்துவம் விரும்பியதை அடைதல்.
அஷ்டமா சித்திகள் என்றால் என்ன?
அணிமா என்றால் என்ன?
அணு என்பது கண்ணுக்குத் தெரிவதில்லை அதாவது நம் கண்ணுக்குத் தெரியும் ஒருவர் தன் உடலை மறைத்துக் கொள்ள முடியுமானால் அது இந்நிலையை குறிக்கும். நமது பாரம்பரிய புராண இதிகாச கதைகளில் இவ்வாறான அனேக கதாபாத்திரங்களை காண முடியும்.
மஹிமா என்றால் என்ன?
பார்வைக்கு சாதாரண மனித உருவத்தில் இருக்கும் திடீரென அசாதாரணமான உயரம் பருமன் அடைவது இந்நிலையை குறி அதாவது திடீரென ராட்சதன் உருவம் எடுப்பது பூதங்களைப் போல் மாறுவது போன்றவற்றை குறிக்கும் உதாரணமாக ராமாயணத்தில் அனுமான் இவ்வாறான உருவ மாற்றங்களை அடைவதை காணலாம்.